ஆதார் எண் உள்ளவர்களுக்கு மட்டுமே அறைகள்... திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ஏழுமையான் கோயிலில் அறைகள் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்களுக்கு அறைகள் கிடைக்காது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் பக்தர்கள் தங்குவதற்கு என தேவஸ்தானத்துக்கு சொந்தமாக 6200 அறைகள் உள்ளன. அதில் 3000 அறைகளை ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

 Adhar number holders only get rooms inTirupati

மீதியுள்ள அறைகளை பதிவு செய்வதில் இடைத்தரகர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் ஊழல் செய்கிறார்கள் என கூறி பக்தர்கள் நேரடியாக சென்று அறையை பதிவு செய்யும் முறையை இன்று தேவஸ்தானம் அறிமுகம் செய்தது. இதன்படி பக்தர்கள் காலை 6 மணி, மதியம் 2 மணிக்கு நேரடியாகச் சென்று அறைகளை பதிவு செய்துகொள்ளலாம்.

அதற்கு பக்தர்கள் அவர்களுடைய ஆதார் எண்ணைக் கொடுக்க வேண்டும். மேலும், ஆதார் எண் உள்ளவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படும். இல்லாதவர்களுக்கு அறை கிடைக்காது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
To control mal practice in booking rooms in Tirupati, Devasadanam decided to give rooms for Adhar number holders.
Please Wait while comments are loading...