For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகியை அடுத்து 7 நிறுவனங்களின் நூடுல்ஸ், பாஸ்தாவை ஆய்வு செய்ய உத்தரவு

By Siva
Google Oneindia Tamil News

மேகி நூடுல்ஸை அடுத்து ஐடிசி, நெஸ்லே, ஜிஎஸ்கே மற்றும் இன்டோ நிஸ்ஸின் புட்ஸ் உள்ளிட்ட பிராண்ட் நூடுல்ஸ், பாஸ்தா, மேக்ரூனி தயாரிப்புகளை சோதனை செய்யுமாறு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் மற்றும் மோனோசோடியம் க்ளூட்டமேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸை சந்தையில் இருந்து வாபஸ் பெற்று அழித்து வருகிறது.

After Maagi goes off shelves, Macroni products now under FSSA Watchlist

இந்நிலையில் திங்கட்கிழமை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது ஐடிசி, நெஸ்லே, ஜிஎஸ்கே மற்றும் இன்டோ நிஸ்ஸின் புட்ஸ் உள்ளிட்ட பிராண்ட் நூடுல்ஸ், பாஸ்தா, மேக்ரூனி தயாரிப்புகளை சோதனை செய்து அறிக்கை அளிக்க அது உத்தரவிட்டுள்ளது.

உணவு பாதுக்காப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவுப்படி சோதனைக்குள்ளாகும் தயாரிப்புகளின் விவரம்,

After Maagi goes off shelves, Macroni products now under FSSA Watchlist

1. நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி பாஸ்தா, சீஸ், மேக்ரூனி பாஸ்தா, மசாலா பாஸ்தா மற்றும் காளான் பென்னே பாஸ்தா.

2. இன்டோ நிஸ்ஸின் பிராண்டின் டாப் ராமன் ஆட்டா மசாலா நூடுல்ஸ்

3. ஐடிசியின் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் மேஜிக் மசாலா, கிளாசிக் மசாலா, சைனீஸ் மசாலா

4. நெஸ்லே மேகி எக்ஸ்ட்ரா சிக்கன் நூடுல்ஸ், த்ரில்லின் கரி, கப்பி மானியா சில்லி சோ மசாலா யோ, மேகி கப்பா மேனியா மசாலா யோ, மேகி டூ மினிட் மசாலா நூடுல்ஸ், மேகி எக்ஸ்ட்ரா டெலிஷியஸ் மேஜிக்கல் மசாலா நூடுல்ஸ், மேகி டூ மினிட் மசாலா தம்தார் நூடுல்ஸ்

5. ஏஏ நியூட்ரிஷனின் யம்மி சிக்கன் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்/பிட்ஸ், யம்மி வெஜ் நூடுல்ஸ்/பிட்ஸ்

6. கிளாக்ஸோ ஸ்மித்கிளைனின் ஃபுட்ஸ் கிரேசி கரி, மஸ்த் மசாலா, ஸ்பைசி ட்ரீட், நோ மேட்டர் ஃபிளேவர், கேரட் மற்றும் ஸ்பினச் நூடுல்ஸ், கிரெய்ன் கேரட் நூடுல்ஸ், ஸ்லைஸ் ஆப் ஸ்பைஸ், ஆ லா மசாலா

7. சி.ஜி. புட்ஸ் இந்தியா வாய் 123 சிக்கின் நூடுல்ஸ், மாமா பன்டே சிக்கின் பூஜியா, 123 வெஜ் நூடுல்ஸ் மற்றும் ருச் இன்டர்நேஷனலின் கோகா இன்ஸ்ட்ன்ட் நூடுல்ஸ்

English summary
After Maggi noodles rwo, FSSAI has ordered to test some products of other brands including ITC, Nestle, GSK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X