For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸ்ஸாமில் இருந்து கமதாபூரை தனி மாநிலமாக பிரிக்க கோரி மாணவர்கள் ரயில் மறியல்

கமதாபூரை அஸ்ஸாமில் இருந்து பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க கோரி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

By Mathi
Google Oneindia Tamil News

கோக்ராஜர்: அஸ்ஸாமில் இருந்து கமதாபூரை பிரித்து தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி மாணவர்கள் 12 மணி நேர ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களில் கோச்- ராஜ்போங்சி சமூகத்தினர் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இந்த மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனிநாடு கோரி 1995-ம் ஆண்டு முதல் ஆயுதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

All Koch Rajbongshi Students Union blocks railway service

அதேநேரத்தில் இப்பகுதிகளை ஒருங்கிணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோச்-ராஜ்போங்சி சமூகத்தினரை பழங்குடி மக்கள் பட்டியலில் சேர்க்கவும் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக அஸ்ஸாமின் கோக்ராஜரில் 12 மணிநேர ரயில் மறியல் போராட்டத்தை மாணவர் அமைப்பினர் இன்று நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதனால் அஸ்ஸாமில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

English summary
The members of the All Koch Rajbongshi Students Union (AKRSU) blocked rail services for 12 hours demanding separate Kamatapur State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X