என் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துட்டாங்க: பதறிய நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாலிவுட் நடிகர் அனுபம் கேர், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குள் ஹேக் செய்யப்பட்டன.

பாலிவுட் நடிகர் அனுபம் கேர், ராஜ்யசபா எம்.பி. ஸ்வபன் தாஸ்குப்தா, புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி மற்றும் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன.

Anupam Kher's twitter account hacked

அனுபம் கேர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார். நண்பர்கள் தெரிவித்த பிறகு தான் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதே அவருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் இது குறித்து ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார்.

பாஜக பொதுச் செயலாளர் மாதவின் ட்விட்டர் கணக்கில் அய்யில்டிஸ் டிம் என்ற அமைப்பு துருக்கி மொழியில் ட்வீட் செய்ததுடன், புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது.

முன்னதாக கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் சிலரின் ட்விட்டர் கணக்குகளை இதே அமைப்பு முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களின் கணக்கு துருக்கியை சேர்ந்த சைபர் படையான அய்யில்டிஸ் டிம்மால் ஹேக் செய்யப்பட்டுள்ளது, உங்களின் முக்கிய தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளது, ஐ லவ் பாகிஸ்தான் என்று மாதவின் ட்விட்டர் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pro-Pakistani Turkish hackers hacked the twitter accounts of actor Anupam Kher, Rajya Sabha member Swapan Dasupta, Puducherry's lieutenant governor Kiran Bedi and BJP general secretary Ram Madhav on tuesday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற