For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லூருக்கு கூட்டம் கூட்டமாக போகும் கொரோனா நோயாளிகள்.. காலியாகும் ஹாஸ்பிட்டல்கள்.. காரணம் என்ன?

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணாபட்டினத்தில் கொரோனாவிற்கு இலவசமாக வழங்கப்படும் ஆயுர்வேத மருந்து வாங்க ஏராமானோர் குவிந்து வருகிறார்கள். இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா உடனே சரியாகிவிடுவதாக வாய் வழி தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் தினமும் ஆயிரக்கணக்கனோர் குவிந்து வருகிறார்கள்.

Recommended Video

    நெல்லூருக்கு கூட்டம் கூட்டமாக போகும் கொரோனா நோயாளிகள் - வீடியோ

    3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று மக்கள் மருத்து வாங்கி வருவதால் அந்த பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    கொரோனா பாதிப்பு இந்தியாவில் மிகவும் உச்சத்தில் இருக்கிறது. மக்கள் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் உச்சகட்ட விரக்தியில் இருக்கிறார்கள். கொரோனா வராமல் இருக்க தடுப்பூசி கண்டுபிடித்த உலக நாடுகள், கொரோனா வந்த பிறகு அவர்களை குணப்படுத்த சரியான மருந்து இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

    ஆந்திரா

    ஆந்திரா

    இதனால் எங்கே மருந்து கிடைக்கும், எங்கே நோய் உடனே சரியாகும், என்ன செய்தால் நோயில் இருந்து மீள முடியும் என்று ஒவ்வொரு மக்களும் தேடித்தேடி செய்திகளை படிக்கிறார்கள். வீடியோக்களை பார்க்கிறார்கள். அப்படி பார்த்த ஒரு விஷயம் தான் ஆந்திராவின் நெல்லூர் கிருஷணா பட்டினம் ஆயுர்வேத மருந்து.

    பரவிய தகவல்

    பரவிய தகவல்


    ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணாபட்டினத்தில் ஆனந்தையா என்பவரது குடும்பம் கொரோனாவிற்கு ஆயுர்வேத மருந்து கொடுத்து வந்துள்ளது. இந்த மருந்தை சாப்பிட்ட பலர் நோயில் இருந்து குணம் அடைந்தவிட்டதாக தகவல்கள் பரவ தொடங்கியது. ஒரு கட்டத்தில் இந்த செய்தி காட்டுத் தீ போல் பரவ தொடங்கியது.

    மக்கள் வெள்ளம்

    மக்கள் வெள்ளம்

    இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கிருஷ்ணாபட்டினத்திற்கு குவிந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஆனந்தையா குடும்பம் மருந்து கொடுத்து வருகிறது. பலர் மருத்துவமனைகளுக்கு போகாமல் நேராக நெல்லூர் கிருஷ்ணாபட்டினம் வருவதால் அங்கு மக்கள் வெள்ளம் காணப்படுகிறது.

    காவலர்கள் குவிப்பு

    காவலர்கள் குவிப்பு

    இப்படி கூடும் கூட்டத்தால் கொரோனா மீண்டும் மிகவும் உச்சம் அடையுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெறுகிறார்கள். போக்குவரத்தை ஒழுங்கப்படுத்தவும், மக்களை வரிசையில் நிற்கவைக்கவும் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    உடனே அதிகரிக்கும் ஆக்சிஜன்

    உடனே அதிகரிக்கும் ஆக்சிஜன்

    ஆந்திர மாநில உளவுத்துறை தகவலின் படி இதுவரை சுமார் 50000 முதல் 60000 பேர் இங்கு வந்து சிகிச்சை பெற்று சென்றிருப்பார்களாம். இந்த நிகழ்ச்சியை உள்ளூர் எம்எல்ஏ தொடங்கி வைத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தால் எந்த பக்க விளைவும் இல்லை என்றும் கூறுகிறார்கள். ஆனந்தையா மருந்தை கண்ணில் விட்ட உடன் உடனடியாக ஆக்சிஜன் லெவல் உடலில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆயுர்வேத மருந்தை எடுத்துக்கொள்வதற்காக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து நேராக வந்துள்ளார், ஆக்சிஜன் இல்லாமல் இரண்டு நிமிடம் கூட சுவாசிக்க முடியாமல் இருந்த தான் இப்போது முழுமையாக மூச்சுவிட முடிகிறது. நன்றாக உள்ளேன் என்று பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

    ஆந்திராவில் அபாயம்

    ஆந்திராவில் அபாயம்

    இதனிடையே இந்த மருந்து வாங்க எல்லா கொரோனாநோயாளிகளும் சென்றுவிட்டதால் நெல்லூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகள் காலியாக உள்ளனர். இன்று மட்டும் மருந்து வாங்க மருந்து குறித்து வாய் வழி தகவல் கேட்டு, சுமார் 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர்(கொரோனா நோயாளிகள் உள்பட) வரிசையில் நிற்கிறார்கள். இதனால் ஆந்திராவில 3வது அலை ஏற்படும் அபாயமும் உள்ளது.

    என்ன மருந்து தருகிறார்

    என்ன மருந்து தருகிறார்

    இது தொடர்பாக லோக் ஆயுக்தாவிடம் மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையின்படி, ஆனந்தையா மருந்தை இலவசமாக எல்லோருக்கும் விநியோகிக்கிறார். ஆயுர்வேத மருத்துவம் படித்த நிபுணர் அல்ல. அவர் அதிகாரிகளிடம் ஆயுர்வேத மருத்துவ சமையல் தயாரிப்பு முறைகளில் பயன்படுத்தப்படும் எந்தவொரு நிலையான தயாரிப்பு முறைகளிலும் இல்லாத வகையில் மருந்தை தயாரித்துள்ளார். அவர் மருந்து தயாரிக்க சில மூலிகைகளைப் பயன்படுத்துகிறார் . மருந்தை தயாரிக்க சில வித்தியாசமான முறைகளை பின்பற்றுகிறார். அவர் நோயாளிகளின் ஆக்சிஜன் லெவலை அதிகரிக்க கண்ணில் விடும் திரவ மருந்தை நீண்ட காலமாக பயன்படுத்தினால் கண்பார்வையை மோசமாக பாதிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.ஆனால் அதைப் பயன்படுத்தியவர்கள் யாரும் எந்தப் புகாரும் செய்யவில்லை. அரசின் அனுமதி பெறாமல் மருந்து விநியோகிக்க முடியாது என்று ஆய்வுக் குழு. அந்த மருந்து குறித்து விரிவான அறிக்கையை வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் லோகாயுக்தாவுக்கு தெரிவித்துள்ளார். எனினும் தொடர்ந்து அங்கு மருந்து மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    Magical Remedy or a recipe for disaster? Huge crowds at Krishnapatnam, Nellore gather to get their share of magical remedy for #Covid from Anandiah a family ayurvedic practitioner. Ppl are getting discharged from hospitals to get the medicine. 3km traffic jams
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X