For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகத்தில் சாராய விற்பனைக்கு அனுமதி இல்லை: முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் விதிக்கப் பட்ட சாராய விற்பனைத் தடையைத் திரும்பப் பெறும் எண்ணமில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சித்தராமையா.

கர்நாடகத்தில் சாராயம் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, சாராயத்துக்கு தடை விதித்தது தவறான முடிவு எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சாராய விற்பனைத் தடை வாபஸ் பெறப்படலாம் என்ற கருத்து அங்கு நிலவியது.

Siddaramaiah

இத்தகைய சூழ்நிலையில், நேற்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசினார் முதல்வர் சித்தராமையா. அப்போது, ‘சாராயத்துக்கு விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்படுமா?' எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் சாராய விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை ஒருபோதும் வாபஸ் பெறப்படாது. சாராய விற்பனையை மீண்டும் தொடங்கும் திட்டமும் அரசிடம் இல்லை. மதுஒழிப்பை முழுமையாக அமல்படுத்துவது என்பது இயலாத காரியம்.

சாராயத்துக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு ஏழை மக்கள், மதுபானத்துக்கு அதிக பணம் செலவு செய்கிறார்கள் என்பதால், சாராயத்துக்கு தடை விதித்தது தவறான முடிவு என்று நான் கூறினேன். அதற்காக நான் மீண்டும் சாராய விற்பனைக்கு அனுமதி அளிக்கப் போவதாக கூறுவது சரியல்ல.

பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்து உள்ளது. எனவே மாநிலத்தில் முழுமையாக மதுஒழிப்பை அமல்படுத்த வாய்ப்பு இல்லை. அதனால் எந்தவொரு பயனும் இல்லை" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Chief Minister Siddaramaiah on Sunday said that the ban on arrack did not help curb alcoholism but it affected the livelihoods of those who were in the business.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X