இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

ஒரு கத்தி.. ஒரு துப்பாக்கி.. கொஞ்சம் பணம்.. இதுமட்டும்தான் உ.பி முதல்வர் யோகி சொத்து பாஸ்!

By Shyamsundar
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  லக்னோ: இந்திய மாநில முதல்வர்களில் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் யாருக்குக் குறைவான சொத்து இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

  இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துடன் முதலிடம் பிடித்து இருக்கிறார். அதேபோல் உத்தர பிரதேஷ் முதல்வர் யோகி ஆதித்யநாத் எவ்வளவு சொத்து வைத்து இருக்கிறார் என்ற பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

  1998ல் தன்னுடைய 26 வயதில் இவர் அரசியலுக்கு வந்தார். அப்போதில் இருந்து இப்போதுவரை இவரது சொத்து கொஞ்சம் மட்டுமே உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  அப்போது எவ்வளவு

  அப்போது எவ்வளவு

  இவர் முதலில் 2004ல் தான் தன்னுடைய சொத்து விவரத்தை வெளியிட்டார். அப்போது கையில் 18 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், 8,62,672 ரூபாய் வங்கியில் இருப்பதாகவும், 50,000 ரூபாய் மற்ற சேமிப்பில் உள்ளதாகவும், கூறினார். இதெல்லாம் சேர்த்து மொத்தம் 9.6 லட்சம் சொத்து அவரிடம் இருக்கிறது.

  2009ல் எவ்வளவு

  2009ல் எவ்வளவு

  2004ல் தன்னுடைய கையில் அதே 18 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், 13,61,944 ரூபாய் வங்கியில் இருப்பதாகவும், 5,99,268 ரூபாய் மற்ற சேமிப்பில் உள்ளதாகவும், கூறினார். இதெல்லாம் சேர்த்து மொத்தம் 21.82 லட்சம் சொத்து அவரிடம் இருக்கிறது.

  இப்போது எவ்வளவு

  இப்போது எவ்வளவு

  இப்போது தன்னுடைய கையில் அதே 30 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், 23,26,439 ரூபாய் வங்கியில் இருப்பதாகவும், 9,96,235 ரூபாய் மற்ற சேமிப்பில் உள்ளதாகவும், கூறியுள்ளார். இதெல்லாம் சேர்த்து மொத்தம் 71.97 லட்சம் சொத்து அவரிடம் இருக்கிறது.

  எதுவும் இல்லை

  எதுவும் இல்லை

  இவர் தன்னிடம் நகை, நிலம் எதுவும் இல்லை என்றுள்ளார். அதேபோல் வேறு எங்கும் அசையும், அசையா சொத்துக்கள் இல்லை. 2004, 2009ல் காரும் எதுவும் இல்லை. இப்போது மூன்று கார் வைத்துள்ளார். மூன்றையும் சேர்த்து மதிப்பு 36,00,000 ரூபாய் ஆகும்.

  துப்பாக்கி, கத்தி

  துப்பாக்கி, கத்தி

  முதல்வர்களிலேயே இவர் மட்டும்தான் துப்பாக்கி, கத்தி வாங்க அதிக செலவு செய்துள்ளார். 2004ல் 30,000 ரூபாயும், 2009ல் 1,80,000 ரூபாயும், இப்போது 1,80,000 ரூபாயும் துப்பாக்கி மற்றும் கத்தி வாங்க மட்டும் செலவு செய்து இருக்கிறார். 1,80,000 என்ன துப்பாக்கி, கத்தி வாங்கினார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

  வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

  English summary
  Andhara CM Chandrababu Naidu top the list in richest CM in India. He leads the table with 177 crore assets. Thiripura CM Manik Sarkar is the poorest CM in India. Mamata and Mehaboopa lists next to Manik Sarkar. Tamilnadu CM Edappadi Palanisami has 7.80 crore assest only. Asset details of UP CM Yogi Adityanath also got released.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more