For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி முழுவதும் துணை ராணுவம் குவிப்பு.. 20 தற்காலிக சிறைகள் அமைப்பு.. உச்ச கட்ட பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Para Military forces in Ayodhya | அயோத்தியில் துணை ராணுவம் குவிப்பு.. தற்காலிக சிறைகள் அமைப்பு

    அயோத்தி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ள நிலையில் வகுப்புவாத அசம்பாவிதங்களை தடுக்க உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அயோத்தி தீர்ப்பின் போது எதற்கும் தயார் நிலையில் இருக்கும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் அயோத்தியின் அண்டை மாவட்டமான அம்பேத்கர் நகரில் 20 தற்காலிக சிறைகளை அமைத்துள்ளனர்.

    இதற்காக இரண்டு மாவட்டங்களிலும் குறைந்தது 17 இண்டர்மீடியம் கல்லூரிகள், ஒரு பட்டப்படிப்பு கல்லூரி மற்றும் இரண்டு அரசு கட்டிடங்களை காவல்துறையினர் கையகப்படுத்தி உள்ளனர்.

    அயோத்தியில் 30 'பாம் ஸ்குவாடு'கள் குவிப்பு.. தீவிரவாத தாக்குதல் அபாயம் எதிரொலி!அயோத்தியில் 30 'பாம் ஸ்குவாடு'கள் குவிப்பு.. தீவிரவாத தாக்குதல் அபாயம் எதிரொலி!

     கலவரங்களை தடுக்க

    கலவரங்களை தடுக்க

    அயோத்தி எஸ்.எஸ்.பி ஆஷிஷ் திவாரி இதுபற்றி ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில் "அயோத்தி தீர்ப்புக்கு பின்னர் கும்பலாக ஏராளமானோர் வந்து குவிந்தால், அதுபோன்ற அவசரகால சூழ்நிலைகளில் இந்த சிறைகள் பயன்படுத்தப்படும். சர்ச்சைக்குரிய இடத்திற்கு அச்சுறுத்தல் மற்றும் நகரத்தில் உள்ள கோயில்களில் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கவும் கலவரங்களை சமாளிக்கவும் படைகள் தயாராக உள்ளன என்றார்.

    போலீஸ் வழக்கு

    போலீஸ் வழக்கு

    மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 5 ஆயிரம் பேர் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளோம். அதில் இரண்டாயிரம் பேருக்கு எதிராக தடை உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அயோத்தி எஸ்.எஸ்.பி ஆஷிஷ் திவாரி கூறினார்.

    ராணுவம் குவிப்பு

    ராணுவம் குவிப்பு

    இதனிடையே அயோத்தியில் ஏராளமான பாரா மிலிட்டரி படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மத்தியப்படைகள் தங்குவதற்கு 300 பள்ளிகளை போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். நகரம் முழுவதுமாக போலீஸ் மற்றும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    ஒற்றுமைக்காக கூட்டம்

    ஒற்றுமைக்காக கூட்டம்

    போலீசார் அயோத்தி நகர் முழுவதிலும் தினமும் மத நல்லிணக்க கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    English summary
    Several companies of para military forces deployed in Ayodhya, 20 temporary jails set up in Ayodhya, 300 schools reserved to accommodate central forces
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X