For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீன்ஸ் பேண்ட் அறிமுகப்படுத்தும் பாபா ராம் தேவ்: நெட்டிசன்களின் குறும்பு கலாய்ப்புகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஜீன்ஸ் பேண்ட் அணிவது என்றால் ஆவல் அதிகம்தான். ஆண்களும் பெண்களும் ஜீன்ஸ் மீது அலாதியான மோகம் கொண்டுள்ளனர். விலை பல்லாயிரமாக விற்பனை செய்யப்பட்டாலும் வாங்கத்தவறுவதில்லை.

சர்வதேச நிறுவனங்களுக்குப் போட்டியாக, உள்நாட்டிலேயே மலிவான விலையில் ஜீன்ஸ் ஆடைகளை தயாரித்து, விற்க உள்ளதாக, பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பதஞ்சலி ஜீன்ஸ் எப்படி இருக்கும் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

யோகா குருவான பாபா ராம்தேவ், பதஞ்சலி என்ற பெயரில் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் வர்த்தகம் மேற்கொண்டுள்ளார். இந்த நிறுவனம், பற்பசை தொடங்கி, குளியல் சோப்கள் வரை பல்வேறு வகையான மூலிகைகளில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் வருகையால், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

ஆடை விற்கும் பாபா ராம்தேவ்

ஆடை விற்கும் பாபா ராம்தேவ்

கடந்த நிதியாண்டில் மட்டும் பதஞ்சலி நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ.5000 கோடிக்கும் அதிகமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், ரூ.10,000 கோடி வரை வருமானம் ஈட்ட பதஞ்சலி இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது ஆடைகள் விற்பனையகத்தை தொடங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

பதஞ்சலி ஜீன்ஸ்

பதஞ்சலி ஜீன்ஸ்

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் ஜீன்ஸ் பேன்டுகளுக்கென்று வரவேற்பு இருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடும் விதத்தில் பதாஞ்சலி நிறுவனத்தின் சார்பில் ஜீன்ஸ் தொடங்கப்படவுள்ளது. ஆடை விற்பனைப்பிரிவு பரிதான் என்று பெயரிடப்படும் என்று கூறப்படுகிறது.

சுதேசி ஜீன்ஸ்கள்

சுதேசி ஜீன்ஸ்கள்

சுதேசி ஜீன்ஸ்கள் இந்த வருட கடைசியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்ப மாதங்களில் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதே போன்று அலுவலகத்திற்கு அணிந்து செல்லும் வகையில் ஃபார்மல் ஆடைகளையும் அறிமுகப்படுத்த உள்ளார்.

சவால் விடும் ராம்தேவ்

சவால் விடும் ராம்தேவ்

ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் ராம்தேவ் கூறியுள்ளார். இதன்மூலமாக, ஜீன்ஸ் சந்தையில் நிலவும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை முறியடிக்கப் போவதாகவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

ஜீன்ஸ் மாடல் இப்படி இருக்குமோ

இது ஒரு புறம் இருக்க நெட்டிஸன்கள் ரதாஞ்சலியை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். ராம்தேவ் விற்பனை செய்யும் ஜீன்ஸ் எந்தெந்த மாடல்களில் இருக்கும் என்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். பூக்களும், ருத்ராச்சக் கொட்டைகளும் நிறைந்துள்ளன.

என்ன வியபாரம்

ஆடைகள் மட்டும் அல்லாமல் வேறெந்த வியாபாரத்தில் எல்லாம் பாபா ராம் தேவ் ஈடுபடுவார் என்று புகைப்படங்களை தயாரித்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். பாதா ராம் தேவ்வை பின்பற்றுபவர்கள் யோகோ உடை பற்றி கேட்கும் போது இது போன்று தொடங்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். நேபாளம், பங்களாதேஷ் நாடுகளில் பதாஞ்சலி தயாரிப்புகள் அதிகம் விற்பனை ஆவதாகவும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் விரைவில் விற்பனை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.

English summary
Yoga guru Ramdev-owned Patanjali group is all set to explore international markets with its FMCG products and may also enter Pakistan and Afghanistan in future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X