தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம்... தினகரனின் புரோக்கர் சுகேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனின் புரோக்கர் சுகேஷின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எப்படியாயினும் பெற்றே தீர வேண்டும் என்று எண்ணியிருந்த டிடிவி தினகரன், டெல்லி புரோக்கர் சுகேஷை அணுகியதாக தகவல்கள் வெளியாகின.

Bail plea rejected for Sukesh chandrasekar

மேலும் சுகேஷோ தனக்கு தேர்தல் ஆணையத்தில் அனைவரையும் தெரியும் என்று பீலா விட்டதால் தினகரனும் முன்பணமாக ரூ. 1.5 கோடி பணம் கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சுகேஷை ஒரு ஹோட்டலில் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணயில், டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் சுகேஷ் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். ஆனால் இந்த வழக்கில் சுகேஷுக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சுகேஷ் ஜாமீன் மனுவை டெல்லி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்வது 4-வது இது முறையாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Twin leaves: Bribery Case broker Sukesh chandra's bail plea was rejected by Delhi District court.
Please Wait while comments are loading...