For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எச்சரித்தது போலவே பெங்களூரில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஐ.எஸ்.ஐ.எஸ்.?

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் இன்று இரவு நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

உலக நாடுகளை மிரட்டுகிற தீவிரவாத இயக்கமாக உருவாகியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ், 'இஸ்லாமிய தேசம்" என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் தாக்குதல் நடத்துவோம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியானது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பதில் @shamiwitness என்ற ட்விட்டர் கணக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் இந்த கணக்கை இயக்குவது பெங்களூரைச் சேர்ந்த மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்றும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மேதி, பெங்களூரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தான். இந்த தகவலைத் தொடர்ந்து மேதி பிஸ்வாஸை பெங்களூர் போலீசார் கைது செய்தனர். இதனிடையே மேதி பிஸ்வாஸின் கைதுக்கு பழிவாங்கும் வகையில் பெங்களூரைத் தகர்ப்போம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் மிரட்டல் விடுத்திருந்தது.

இந்த மிரட்டல் விடுக்கப்பட்ட 15 நாட்களுக்குள்ளேயே பெங்களூர் நகரத்தில் இன்று இரவு குண்டுவெடித்துள்ளது. இதனால் இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகளே காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பெங்களூர் நகரம் முழுவதும் உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2005-ல் இதே டிச.28ல் பெங்களூரில் தாக்குதல்

பெங்களூர் நகரில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதியன்று இரவு 7 மணியளவில் இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் டெல்லி ஐஐடி பேராசிரியர் முனீஸ் சந்திராப் பூரி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் வளாகத்துக்குள் நுழைந்த 2 தீவிரவாதிகளே இத்தாக்குதலை நடத்தியிருந்தனர். 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இத்தாக்குதல் நடைபெற்ற அதே நாளில் பெங்களூரில் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Police sources said, the terrorist movement ISIS's role suspects in Bangalore blast on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X