For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய ரூபாயைவிட திடமாக வலிமையாக இருக்கும் வங்கதேச நாணயம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க டாலரோடு இந்தியா மற்றும் வங்கதேச நாட்டு நாணயங்களை ஒப்பிடு செய்து பார்த்தால் இந்திய ரூபாய் மதிப்பைவிட நிச்சயம் வங்கதேச நாணயமான டாக்கா வலிமையாக திகழ்வது தெரிகிறது.

10 வருடங்களில் 43.92 ரூபாயாக இருந்த ஒரு அமெரிக்க டாலர் தற்போது 71 ரூபாயை தாண்டி, சுமார் 30 ரூபாய் அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்துள்ளது.

 bangladesh currency is stronger than indian currency

அதேநேரம் 10 ஆண்டுகளில் வங்கதேச டாக்கா நாணய மதிப்பு 68.24 டாக்கா ஆக இருந்த நிலையில் தற்போது 84.77 டாக்கா ஆக உள்ளது. இதன் மூலும் அந்த நாட்டின் நாணய மதிப்பு 16 ரூபாய் என்ற அளவிலேயே அதிகரித்துள்ளது. எனவே இதை வைத்து பார்க்கும் போது இந்திய ரூபாய் மதிப்பைவிட வங்கதேசத்தின் டாக்கா நாணய மதிப்பு வலிமையாக இருப்பது தெரிகிறது.

அதேநேரம் வங்க தேச நாணயத்தின் மதிப்பு நம்மூர் ஒரு ரூபாயை ஒப்பிடும் போது 85 பைசா என்ற அளவிலேயே உள்ளது. அதாவது நம்மூர் பண மதிப்பைவிட 15 பைசா மட்டுமே தற்போது குறைவாக வங்கதேச நாணயத்தின் மதிப்பு உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2014 மே மாதம் 58 ரூபாயாக இருந்த நிலையில் சரியாக 5 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் 72 ரூபாயாக சரிந்துள்ளது. குறிப்பாக கடந்த 3மாதத்தில் மட்டும் 4 ரூபாய் அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தி வீழ்ச்சி மற்றும் அதன் காரணமாக வேலை இழப்பு போன்ற காரணங்கள் முக்கியமானவை. இதுதவிர மத்தியில் ஈரானிடம் இந்திய ரூபாயில் பெட்ரோல் வாங்கவிடாமல் தடுத்த அமெரிக்காவின் செயல்கள் மற்றும் சீனா அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் போன்றவைகள் காரணமாகவும் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது.

English summary
bangladesh currency is stronger than indian currency: 1 rupee is equal to 1.16 taka as of Monday evening. This means that the Indian rupee is 16 per cent stronger than the Bangladeshi taka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X