For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகார் தேர்தல்: நிதிஷ்-லாலு அணிக்கு 137; பா.ஜ.க. அணிக்கு 95 இடங்கள்- சி.என்.என். ஐ.பி.என். சர்வே

By Mathi
Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி 137 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். சர்வே தெரிவித்துள்ளது. ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்ற கனவில் இருக்கும் பா.ஜ.க. அணிக்கு 95 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது இந்த சர்வே.

பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 12-ந் தேதி தொடங்கி நவம்பர் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 8-ந் தேதி எண்ணப்படுகிறது.

ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரு அணியாகவும் பா.ஜ.க. தலைமையில் லோக் ஜனசகதி, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி மற்றும் அவாமி மோர்ச்சா ஆகியவை ஒரு அணியாகவும் களத்தில் இருக்கின்றன.

இதுவரையிலான பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகளில் பொதுவாக ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கும் பா.ஜ.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது. தற்போது சி.என்.என்.-ஐ.பி.என்.-7- ஆக்சிஸ் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான அணி 137 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 38 மாவட்டங்களில் 24,576 பேரிடம் கடந்த செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இக்கருத்து கணிப்பு முடிவுகள்:

ஜேடியூவுக்கு 137

ஜேடியூவுக்கு 137

ஐக்கிய ஜனதா தளம் 69; ராஷ்டிரிய ஜனதா தளம் 48, காங்கிரஸ் 20 இடங்களில் வெல்லும். மொத்தம் 137 இடங்களை இக்கூட்டணி கைப்பற்றும்.

காங்கிரஸ் விஸ்வரூபம்

காங்கிரஸ் விஸ்வரூபம்

கடந்த 2010ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெறும் 4 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி இம்முறை 23 தொகுதிகளில் போட்டியிட்டு 20 தொகுதிகளைக் கைப்பற்றி விஸ்வரூபமெடுக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

என்.டி.ஏவுக்கு 95

என்.டி.ஏவுக்கு 95

பாரதிய ஜனதா 82; லோக் ஜன சக்தி 2; அவாமி மோர்ச்சா 8; ராஷ்டிரிய லோக் சமிதி 3 இடங்களில் வெல்லும். மொத்தம் 95 இடங்களை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும்.

வாக்கு விகிதம்

வாக்கு விகிதம்

ஐக்கிய ஜனதா தளம்- 26% ; ராஷ்டிரிய ஜனதா தளம்- 15%; காங்கிரஸ் 5% என மொத்தம் 46% வாக்குகளை இக்கூட்டணி பெறும்.

பாரதிய ஜனதாவுக்கு 29% ; லோக் ஜனசக்தி 4%; அவாமி மோர்ச்சா 3%; ராஷ்டிரிய லோக் சமதா- 2% என தேசிய ஜனநாயகக் கூட்டணி 38% வாக்குகளைப் பெறும்.

எந்த வயதினர்....?

எந்த வயதினர்....?

18 முதல் 25 வயதினரில் ஐக்கிய ஜனதா தளம் அணிக்கு 46%; பாஜக அணிக்கு 40% பேரும்

26 முதல் 35 வயதினரில் ஐக்கிய ஜனதா தளம் அணிக்கு 46%; பாஜக அணிக்கு 39% பேரும்

36 முதல் 50 வயதினரில் ஐக்கிய ஜனதா தளம் அணிக்கு 46%; பாஜக அணிக்கு 38% பேரும் வாக்களித்துள்ளனர்.

50 வயதுக்கும் அதிகமானோரில் ஐக்கிய ஜனதா தளம் அணியை 45% ; பாஜக அணியை 35% பேர் ஆதரிக்கின்றனர்.

முஸ்லிம் வாக்குகளை அள்ளும் ஐ.ஜனதா

முஸ்லிம் வாக்குகளை அள்ளும் ஐ.ஜனதா

ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு 72% முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜாதிய அடிப்படையில் 67% யாதவர்கள்; 53% குர்மி-கோரிகள்; 31% இதர பிற்படுத்தப்பட்டோர் இந்த அணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.

முற்படுத்தப்பட்டோர் வாக்குகளை அள்ளும் பா.ஜ.க.

முற்படுத்தப்பட்டோர் வாக்குகளை அள்ளும் பா.ஜ.க.

அதே நேரத்தில் முற்படுத்தப்பட்டோரில் 73% பேர் ஆதரவு பா.ஜ.க. தலைமையிலான அணிக்கே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முஸ்லிம்களில் 10%; யாதவர்களில் 21%; குர்மி-கோரிகளில் 36%; இதர பிற்படுத்தப்பட்டோரில் 53% பேர் பா.ஜ.க. அணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தலித் வாக்குகள் யாருக்கு?

தலித் வாக்குகள் யாருக்கு?

தலித் கட்சிகளான லோக் ஜனசக்தி, அவாமி மோர்ச்சாவை உள்ளடக்கியிருந்தாலும் பா.ஜ.க. அணிக்கு 38% தலித்துகளும் ஐக்கிய ஜனதா தளம் அணிக்கு 42% பேரும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ் அரசு பற்றி

நிதிஷ் அரசு பற்றி

முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயல்பட்டதாக 45%; எதிர்பார்ப்புகளுக்கு அதிகமாக செயல்பட்டதாக 17% எதிர்பாத்ததை விட குறைவாக செயல்பட்டதாக 38% பேர் தெரிவித்துள்ளனர்.

நிதிஷ் மாடல்...

நிதிஷ் மாடல்...

நிதிஷ்குமார் முன்வைக்கும் வளர்ச்சிக்கான மாதிரிக்கு 52% பேரும்; பிரதமர் மோடி முன்வைக்கும் வளர்ச்சிக்கான மாடலுக்கு 48% பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

ஓவைஸி குறித்து...

ஓவைஸி குறித்து...

மஜ்லிஸ் கட்சியின் ஓவைஸி பீகார் தேர்தலில் பங்கேற்றிருப்பதால் எந்த ஒரு தாக்கமும் இல்லை என 52% பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என 6% பேர் கூறியுள்ளனர்.

அடுத்த முதல்வர் நிதிஷ்

அடுத்த முதல்வர் நிதிஷ்

அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு நிதிஷ்குமாருக்கு 43%; பா.ஜ.க.வின் சுஷில்மோடிக்கு 33%; லாலு- 6%; மாஞ்சி -4% ராம்விலாஸ் பாஸ்வான் 3% என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இளம் தலைவர்களில் ராகுலுக்கு 4-வது இடம்

பீகாரில் மிகபிரபலமான இளம் தலைவர்கள் குறித்த கேள்விக்கு கிடைத்த பதில்கள்:

பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் - 33%

லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் - 22%

பா.ஜ.க. தலைவர் ஷானவாஸ் உசேன் 19%

ராகுல் காந்தி- 18% பேர் என தெரிவித்திருக்கின்றனர்.

இவ்வாறு சி.என்.என்.ஐ.பி.என் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
CNN-IBN survey said that the Grand Alliance led by Bihar CM Nitish Kumar is tipped to win a simple majority in the assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X