For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்குவங்கத்தில் உங்களால் பணப்பெட்டிகளை கொண்டு தேர்தல் நடத்த முடியாது.. மமதா வார்னிங்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பாஜக பணப்பெட்டிகளை கொண்டு தேர்தல் நடத்த முடியாது என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு உள்ளிட்டோர் மமதா பானர்ஜிக்கு ஆதரவாக மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

BJP brings money with the z plus security: Mamata

இதேபோல் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களும் மேற்கு வங்க மாநிலத்தில் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடியும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பர்கானாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய மமதா, நேற்று பா.ஜ., வேட்பாளர் ஒருவரின் காரில் இருந்து ரூ.1,13,895 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்றும், இசட் பிளஸ், ஒய் பிளஸ் பாதுகாப்பு வைத்திருக்கும் பா.ஜ.க, தலைவர்கள் பலர் தங்களின் பாதுகாப்பை பயன்படுத்தி போலீஸ் வாகனத்திலேயே கட்டுக்கட்டாக பணம் அடுக்கப்பட்டுள்ள பெட்டிகளை கொண்டு செல்கின்றனர்.

தேர்தலுக்கு முன்பே சமூக விரோத சக்திகளுக்கு பணம் கொடுத்து ஓட்டுச்சாவடிகளை கைப்பற்ற சொல்லி உள்ளனர். இது தேர்தலா? பிரதமர் இருக்கும் இடத்தில் ஏன் எந்த பத்திரிகையையோ அல்லது தேர்தல் கமிஷன் போட்டோகிராபரையோ அனுமதிக்கவில்லை?

ஹிமாச்சலில் பழுதான ஹெலிகாப்டர்.. டக்கென மெக்கானிக் ஆக மாறி பழுதை நீக்கி அசத்திய ராகுல்காந்தி ஹிமாச்சலில் பழுதான ஹெலிகாப்டர்.. டக்கென மெக்கானிக் ஆக மாறி பழுதை நீக்கி அசத்திய ராகுல்காந்தி

ஒருநாள் ஒரு பெட்டி எடுத்துச் செல்லப்பட்டதாக ஒரே ஒரு போட்டோ மட்டும் வெளிவந்தது. மேற்குவங்கத்தில் உங்களால் பணப்பெட்டிகளை கொண்டு தேர்தல் நடத்த முடியாது. எந்த தலைவர் எங்கு பணப்பட்டுவாடா செய்தாலும் நாங்கள் பிடிப்போம்.

இரவில் பண பட்டுவாடா செய்தாலும் விழித்திருந்து பிடிக்கும்படி கூறி உள்ளேன். பிரசாரம் ஓய்ந்து விட்டதால் இரவுகளில் பணம் கொடுக்க துவங்கி விட்டனர். மேற்கு வங்கத்தில் பாஜகவின் பணம் நிரப்பப்பட்ட கார்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு மமதா பானர்ஜி பாஜக மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறினார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banarjee accuses BJP bringing money with the z plus security.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X