For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்: கடந்த தேர்தலைவிட பாஜக வெற்றி பெற்ற தொகுதிகள் ரொம்ப கம்மி பாஸ்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் கடந்த தேர்தலோடு ஒப்பிட்டால் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன. பாஜக இறங்கு முகத்தை சந்தித்துள்ளது.

மாலை நிலவரப்படி, குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், பிறர் 3 தொகுதிகளிலும் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றிருந்தது.

கடந்த 2012ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 115 தொகுதிகளை வென்றது. அதை ஒப்பிட்டால் இது குறைவாகும்

கடந்த சட்டசபை தேர்தல்

கடந்த சட்டசபை தேர்தல்

கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 61 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இம்முறை பாஜக 16 சீட்டுகளை இழந்துள்ளது. காங்கிரஸ் 19 தொகுதிகளை அதிகமாக கைப்பற்றியுள்ளது.

முன்னேற்றம்

முன்னேற்றம்

இதனால் பாஜக வெற்றி பெற்றும் அதற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தோற்றபோதிலும், இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் குறைகிறது

ஆண்டுதோறும் குறைகிறது

கடந்த 22 வருடங்களாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. தேர்தலுக்கு தேர்தல் அக்கட்சி பெறும், சீட்டுகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தபடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்திக்கு மகிழ்ச்சி

ராகுல் காந்திக்கு மகிழ்ச்சி

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற நிலையில் வெளியான முதல் தேர்தல் முடிவு இதுவாகும். இந்த முன்னேற்றம் ராகுலின் பிரசாரத்திற்கு கிடைத்த வெற்றி என நினைக்கிறது காங்கிரஸ் தலைமை.

English summary
BJP getting least seats than last assembly election, shows trending.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X