எங்க வேட்பாளரை பாஜக கடத்திருச்சு.. குண்டை போட்ட ஆம் ஆத்மி! குஜராத் தேர்தலில் புதிய பிரச்சனை
காந்திநகர்: குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை காணவில்லை என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருக்கிறார்.
27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வரும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது.

மும்முனைப் போட்டி
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. மூன்று கட்சிகளின் தலைவர்களும் குஜராத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் பாஜகவே வலுவாக இருக்கிறது.

ஆம் ஆத்மி
புதிதாக தேர்தலை எதிர்கொள்ள ஆம் ஆத்மி இதில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் முந்தும் என ஒரு சில கருத்துக்கணிப்புகள், ஒரு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என வேறு சில கருத்துக்கணிப்புகளும் தெரிவித்து வருகின்றன. அதே நேரம் பஞ்சாபில் ஆம் ஆத்மியை ஆட்சியை கைப்பற்றியதால் குஜராத்தில் அதன் செயல்பாடுகள் உற்று நோக்கப்பட்டு வருகின்றன.

சாதி மத அரசியல்
காங்கிரஸின் மதசார்பற்ற வாக்குகளை ஆம் ஆத்மி பிரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவின் இந்துத்துவ ஆதரவு வாக்குகளை பிரிக்கும் வேலையில் ஆம் ஆத்மி இறங்கி இருக்கிறது. அதேபோல் அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் பட்டேல் சமுதாயத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது ஆம் ஆத்மி.

ஆம் ஆத்மி வேட்பாளர்கள்
அதேபோல் குஜராத்தில் போட்டியிடும் வேட்பாளர் தேர்விலும் கூடுதல் கவனம் செலுத்தியது அக்கட்சி. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் 15 கட்ட வேட்பாளர் பட்டியலை இதுவரை அக்கட்சி வெளியிட்டு இருக்கிறது. அந்தந்த தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் வேட்பாளர்
மற்ற கட்சிகள் முதலமைச்சர் வேட்பாளரை வெளிப்படையாக அறிவிக்காத நிலையில் ஆம் ஆத்மி கட்சி மட்டும் தேசிய இணை பொதுச்செயலாளர் இசுதீன் காத்வியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. அதே நேரம் காங்கிரஸ் ஆதரவாளர்களோ ஆம் ஆத்மியை பாஜகவின் பி டீம் என விமர்சித்து வருகின்றனர்.

அமித்ஷா பேச்சு
இந்த நிலையில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் தேர்தல் இருமுனைப் போட்டியா அல்லது மும்முனைப் போட்டியா? என்பது தேர்தலுக்கு பின் தெரியும் என்றார். மூன்றாம் அணிக்கு குஜராத் மக்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.

வேட்பாளர் கடத்தல்
இதற்கிடையே குஜராத் மாநிலம் சூரத் கிழக்கு தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கஞ்சன் ஜாரிவாலாவை பாஜக கடத்திவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அக்கட்சித் தலைவர் கெஜ்ரிவால், "சூரத் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் எங்கள் வேட்பாளர் கஞ்சன் ஜாரிவாலா மற்றும் அவரது குடும்பத்தினரை நேற்றில் இருந்து காணவில்லை.

கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா புகார்
பாஜக முதலில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வைக்க முயற்சி செய்தது. ஆனால், அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. அதன் பின்னர் வேட்புமனுவை திரும்பபெறுமாறு பாஜக மிரட்டல் விடுத்தது. தற்போது அவர் கடத்தப்பட்டாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதேநேரம் அக்கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியாவோ பாஜக குண்டர்கள் அவரை கடத்தி சென்றதாக குற்றம்சாட்டி உள்ளார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications