இதுக்கு முடிவே இல்லையா?.. மகனின் திருமண வரவேற்பை மாட்டுத் தொழுவத்தில் நடத்திய பாஜக உறுப்பினர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பாஜக கட்சியினருக்கும் பசுவுக்கு இடையில் இருக்கும் உறவு பிரிக்க முடியாத ஒன்று. முக்கியமாகக் கடந்த 4 வருடமாக இவர்கள் பந்தம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் பஞ்சாப்பில் பாஜக கட்சியின் தேசிய துணை தலைவர் அவினாஷ் ராய் கண்ணா, புதிய சம்பவம் ஒன்றைச் செய்துள்ளார். அவர் தன்னுடைய மகன் திருமண வரவேற்பை மாட்டுத்தொழுவம் ஒன்றில் நடத்தியுள்ளார்.

பஞ்சாப்பில் இருக்கும் காந்தி என்ற இடத்தில் இந்த வரவேற்பு நடந்துள்ளது. இந்த வரவேற்பு மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.

எப்படி

எப்படி

அங்கு மொத்தம் 2500 மாடுகளைக் கட்டி வைக்கப்பட்டுள்ளது. முதலில் தொழுவத்தில் வாயில் வழியாகச் சென்று, மாடுகள் கட்டி இருக்கும் இடத்தைத் தாண்ட வேண்டும். அதன்பின்தான் வரவேற்பு நடக்கும் இடத்தில் எல்லோரும் செல்ல வேண்டும்.

பெரிய ஆட்கள்

பெரிய ஆட்கள்

இந்த விழாவிற்கு பாஜக கட்சியைச் சேர்ந்த முக்கிய நபர்கள் வந்துள்ளார்கள். மற்ற கட்சியில் இருக்கும் பெரிய நபர்களும் வந்துள்ளனர். முன்னாள் ஆளுநர்கள் பலர் வந்துள்ளனர். இவர்கள் காரை உள்ளே கொண்டுவர வசதி இல்லாத காரணத்தால் வெளியே நிறுத்தி இருக்கிறார்கள்.

ஏன்

ஏன்

இதற்கு அவர் காரணமும் சொல்லி இருக்கிறார். அதன்படி ''மாடுகள் என்றால் எனக்குப் பிடிக்கும். முக்கியமாகப் பசுக்கள் என்றால் நிறைய பிடிக்கும். இதனால் மாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த விழாவை இப்படி நடத்துகிறேன்'' என்றுள்ளார்.

ஆனாலும் கூட

ஆனாலும் கூட

ஆனாலும் அதே சமயத்தில் இந்தத் தொழுவத்திற்கு இப்போதுதான் புதிதாக பெயிண்ட் அடித்துள்ளார்கள். முக்கியமாக எந்த இடத்திலும் நாற்றம் அடிக்காமல் பார்த்துக் கொண்டு உள்ளார்கள். நாற்றமே வரக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP party's national vice-president Avinash Rai Khanna in Punjab celebrates son's reception at gaushala. He says that he did this for awareness towards cow protection .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற