காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதுதான் மிச்சம்.. மணிப்பூர் பாஜகவினர் எடுத்த அதிரடி முடிவு
இம்பால்: மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பாஜக மூத்த நிர்வாகிகள் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளில் இணைந்துள்ளனர்.
மணிப்பூர் சட்டசபையின் பதவிக்காலம் வரும் மார்ச் 19 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்த மாநிலத்திற்கு வரும் 27 ஆம் தேதியும் மார்ச் 3 ஆம் தேதியும் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகியுள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 60 சட்டசபை தொகுதிகளை கொண்டது. இங்கு பெரும்பான்மை பலம் 31 ஆக உள்ளது.

வேட்பாளர் பட்டியல்
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் மூத்த பாஜக தலைவர்களுக்கு சீட் ஒதுக்கப்படாததால் அவர்கள் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து பெரும்பாலான அதிருப்தியாளர்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகிறார்கள்.

பாஜக எம்எல்ஏ
மொய்ராங் சட்டசபை தொகுதியின் பாஜக எம்எல்ஏ சரத் சந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இணைந்தார். அது போல் சீக்மாய் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நிங்தோஜாம் பிரென், நிங்தோஜாம் ஜாய்குமார் சிங் உள்ளிட்டோர் காங்கிரஸில் இணைந்தனர்.

உருவபொம்மைகள்
பாஜகவை சேர்ந்த மேலும் 12 தலைவர்கள் காங்கிரஸுடன் பேச்சவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் மணிப்பூர் சட்டசபை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டவுடன் போராட்டம் நடத்தப்பட்டது. அதிருப்தியாளர்கள் கட்சி கொடிகளையும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர் பிரென் சிங்கின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.

பாஜக தலைமை
மாநிலத்தில் உள்ள பாஜக அலுவலகத்தை பலர் சூறையாடியதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பிறகு பாஜகவில் இணைந்தவர்களுக்கு தற்போது பாஜக தலைமை போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.

4 பேர் மாற்றுக் கட்சியினர்
வேட்பாளர்கள் பட்டியலில் 10 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து இணைந்தவர்கள், மேலும் 4 பேர் மற்ற கட்சியிலிருந்து இணைந்தவர்கள். இது போல் பாஜக எம்எல்ஏக்கள் சிலர் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியிலும் இன்னும் ஓரிரு தினங்களில் இணைவார்கள் என தெரிகிறது.

விசுவாசம்
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மணிப்பூர் செய்தித் தொடர்பாளர் கே எச் தேவாபிரதா கூறுகையில் பாஜகவிலிருந்து காங்கிரஸுக்கு வருகை தருவதை வரவேற்கிறோம். நாங்கள் ஏற்கெனவே மணிப்பூரில் 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டோம். மற்ற இடங்களுக்கு இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்போம். ஆனால் பாஜகவிலிருந்து பலர் எங்களை தொடர்பு கொண்டு காங்கிரஸுக்கு விசுவாசமாக இருப்போம் என வாக்குறுதி அளித்துள்ளார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications