For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்தீஸ்கரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு பூஜை செய்த பாஜக அமைச்சர்

Google Oneindia Tamil News

Recommended Video

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு பூஜை செய்த பாஜக அமைச்சர்-வீடியோ

    ராய்பூர்: சத்தீஸ்கரில் தேர்தல் துவங்கும் முன்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு பாஜக அமைச்சர் தயாள்தாஸ் பகேல் பூஜை செய்துள்ளார்.

    சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 72 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அன்று நடந்தது.

    BJP minister performs puja of an EVM in Chattisgarh

    பெமெதரா மாவட்டத்தில் உள்ள நவகர் பகுதியில் பாஜக அமைச்சர் தயாள்தாஸ் பகேல் போட்டியிட்டார். அவர் வாக்குப்பதிவு துவங்கும் முன்பு மின்னணு எந்திரத்திற்கு பூஜை செய்து தேங்காய் உடைத்துள்ளார்.

    இது குறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து உள்ளூர் ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இதையடுத்து நவகர் தேர்தல் அதிகாரி பகேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    சந்திரபாபு நாயுடுவை விட அவரின் 3 வயது பேரன் 6 மடங்கு பணக்காரர்: எவ்வளவு சொத்து தெரியுமா? சந்திரபாபு நாயுடுவை விட அவரின் 3 வயது பேரன் 6 மடங்கு பணக்காரர்: எவ்வளவு சொத்து தெரியுமா?

    வீடியோவில் பூத் நம்பர் சரியாக தெரியாததால் அவர் எங்கு இந்த பூஜையை செய்தார் என்று தெரியவில்லை. பகேலின் செயலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஒரு அரசியல் தலைவர் மக்களை வணங்க வேண்டுமே தவிர மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அல்ல என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சைலேஷ் நிதின் த்ரிவேதி தெரிவித்துள்ளார்.

    English summary
    BJP minister Dayaldas Baghel performed puja of an electronic voting machine in a booth before the start of second phase polling in Chattisgarh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X