முன்னாள் மத்திய அமைச்சர் சன்வர்லால் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக கட்சியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.பி. சன்வர்லால் டெல்லியில் காலமானார்.

உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சன்வர்லால் சிகிச்சை பலனின்றி அதிகாலையில் மரணமடைந்தார் அவருக்கு வயது 62.

BJP MP from Ajmer Sanwar Lal Jat passes away in Delhi

ராஜஸ்தானின் அஜ்மீர் தொகுதியில் இருந்து லோக்சபாவிற்கு தேர்வானர் பாஜக எம்.பி. சன்வர்லால் ஜாட். நரேந்திர மோடி அமைச்சரவையில், 2014 நவம்பர் முதல் 2016 ஜூலை வரை மத்திய நீர்வள துறை இணையமைச்சராக இருந்தவர் சன்வர்லால்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மயங்கி விழுந்த சன்வர்லாலிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சன்வர்லால் இன்று அதிகாலை மரணமடைந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி இரங்கல்

  Former MP Era Sezhiyan passes away at the age of 95

  சன்வர்லால் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சன்வர்லால் மறைவு பாஜகவிற்கு மிகப்பெரிய இழப்பு என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மோடி.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sanwar Lal Jat, a Bharatiya Janata Party (BJP) MP and former Union Minister Sanwar Lal Jat, who was being treated at AIIMS in New Delhi, has passed away earlier this morning.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற