"குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணமானவர்களை பாஜக பாதுகாக்கிறது" -கெஜ்ரிவால் விளாசல்
அகமதாபாத்: குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணமானவர்களை பாஜக பாதுகாக்கிறது. குஜராத்துக்கு புதிய என்ஜின் அரசாங்கம் தான் தேவை. இரட்டை என்ஜின் துருபிடித்துவிட்டது. பழசாகிவிட்டது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பாஜகவை விளாசி பிரசாரம் மேற்கொண்டார்.
குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி அனல் பறக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மோர்பி மாவட்டம் வன்கனெர் டவுன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பாஜக மீது விமர்சனங்களை முன்வைத்த கெஜ்ரிவால், மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை பாஜக அரசு காப்பாற்ற முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:-

55 பேர் குழந்தைகள்
மோர்பில் நடைபெற்ற சம்பவம் மிகவும் துயரமானது. பலியான 150- பேரில் 55 பேர் குழந்தைகள் என்பது வேதனைக்குரியது. ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை காப்பாற்றும் முயற்சி நடக்கிறது என்பதுதான். இரட்டை என்ஜின் கொண்ட பாஜக அரசாங்கத்திற்கு வாக்களித்து அதிகாரத்திற்கு கொண்டு வந்தால் மோர்பி போன்ற சம்பவங்கள் அரங்கேறும்.

விபத்துக்கு காரணமானவர்களை காப்பாற்ற
மோர்பி பாலம் இடிந்து விழுந்து விபத்துக்கு காரணமானவர்களை ஏன் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்? இந்த விபத்துக்கு காரணமானவர்களுடன் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி இல்லையா? மோர்பி பாலத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்ட ஒரேவா குழுமத்தின் உரிமையாளர்கள் பெயர் எப்.ஐ.ஆரில் இடம் பெறவில்ல. எங்களுக்கு இரட்டை என்ஜின் அரசாங்கம் தேவையில்லை.

இரட்டை என்ஜின் துருபிடித்துவிட்டது
ஆனால், புதிய என்ஜின் அரசாங்கம் தான் தேவை. இரட்டை என்ஜின் துருபிடித்துவிட்டது. பழசாகிவிட்டது. எனவே அதை அழிக்க வேண்டும். நீங்கள் மீண்டும் இரட்டை என்ஜின் அரசாங்கத்தை கொண்டு வந்தால் மோர்பி பாலம் இடிந்து விழும். நீங்கள் புதிய என்ஜின் அரசாங்கத்தை கொண்டுவந்தால் பிரம்மாண்ட மோர்பி பாலத்தை கட்டுவோம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை
மேலும் அவர் கூறுகையில், ''குஜராத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் டெல்லியில் செய்தவையே. நான் படித்தவன். எப்படி பணி செய்ய வேண்டும். எப்படி பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று எனக்கு தெரியும். எங்களுக்கு பொய் வாக்குறுதிகள் அளிக்கும் பழக்கம் கிடையாது. வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய் போடுவதாக நான் வாக்குறுதி கொடுக்கவில்லை. நான் நேர்மையானவன். எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை'' என்றார்.
-
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மீண்டும் உயிர் பெறும் "இந்தியா.." மம்தா எடுக்கும் முயற்சி.. விஜய் உள்ளே.. ஸ்டாலின் வெளியே! -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!!












Click it and Unblock the Notifications