மெட்ரோ ரயிலில் கேஜ்ரிவால் பயணித்தது தேவையில்லாத பப்ளிசிட்டி ஸ்டண்ட்- பாஜக
டெல்லி: டெல்லி சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்புக்கு முந்தைய விவாதத்தின்போது பேசிய பாஜக தலைவர் டாக்டர் ஹர்ஷ வர்த்தன், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும் பதவியேற்க வந்தபோது மெட்ரோ ரயிலில் பயணித்தது தேவையற்றது, விளம்பரம் தேடும் நோக்கிலானது என்று குற்றம் சாட்டினார்.
கேஜ்ரிவால் இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரினார். அதன் மீ்து விவாதம் நடந்தது. அப்போது பேசிய ஹர்ஷவர்த்தன், டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்ததன் மூலம் டெல்லி மக்களிடையே நன்றாக விளம்பரம் தேடிக் கொண்டுள்ளனர் கேஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும். இது தேவையற்ற பப்ளிசிட்டி ஸ்டண்ட்.

கேஜ்ரிவால் அரசு அறிவித்துள்ள இலவச குடிநீர், மின் கட்டணக் குறைப்பு போன்றவை மக்களிடையே உண்மை நிலையை மறைக்கும் செயலாகும். இது சாத்தியமில்லாதது.
ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டபோது மக்களிடையே மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது உண்மைதான். நாட்டு மக்கள் இதை வரவேற்றனர், எதிர்பார்த்தனர். ஆனால் காங்கிரஸ் உதவியுடன் அவர்கள் ஆட்சியமைத்ததன் மூலம் அந்த நம்பிக்கை தகர்ந்து போய் விட்டது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications