Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி? மம்தாவுக்கு நெருக்கடி? பெண்களுக்கு பாதுகாப்பில்லை - குஷ்பூ

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி "கண்டனத்திற்குரிய" கருத்து தெரிவித்ததை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது

ஏப்ரல் மாத தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நாடியா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்காலியில் 14 வயது சிறுமி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன் உள்ளிட்டோரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் இறந்தார்.

மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவரின் மகன் மீது குற்றம் சாட்டிய நிலையில், வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் பலாத்காரம்

சிறுமி பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி சரச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். அதாவது " "பாதிக்கப்பட்ட பெண் "உண்மையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா அல்லது காதல் விவகாரத்தில் இருந்ததால் கர்ப்பமானாரா? எனக் கேள்வி எழுப்பியனார். திங்களன்று நடந்த பிஸ்வா பங்களா மேளா பிரங்கன் தொடக்க விழாவில் உரையாற்றிய பானர்ஜி, "அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? என பேசினார். இதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக கோரி வருகிறது.

பாஜக விசாரணை குழு

பாஜக விசாரணை குழு

ஹன்ஷ்காலியில் 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த அக்கட்சி அமைத்த குழுவில் பாஜக எம்பி ரேகா வர்மா, உத்தரபிரதேச அமைச்சர் பேபி ராணி மவுரியா, தமிழக எம்எல்ஏ வானதி சீனிவாசன், குஷ்பு சுந்தர், மேற்கு வங்க எம்எல்ஏ ருப்மித்ரா சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த உண்மை கண்டறியும் குழு மேற்கு வங்காளத்தின் ஹன்ஷ்காலிக்கு சென்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்தித்ததுஆறுதல் கூறினர்.

மம்தாவுக்கு எதிர்ப்பு

மம்தாவுக்கு எதிர்ப்பு

இந்நிலையில் ஹன்ஷ்காலிக்கு வந்த பாஜக உண்மை கண்டறியும் குழு, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் குறித்து "கண்டனத்திற்குரிய" கருத்து தெரிவித்ததற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு சரியான சட்டம் ஒழுங்கை பராமரிக்கவில்லை என்று மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசை பாஜக கடுமையாக சாடியது. , ஹன்ஷ்காலி பலாத்கார வழக்கைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியது.

பதவி விலக கோரிக்கை

பதவி விலக கோரிக்கை

மம்தா பானர்ஜி இதுவரை இந்த வழக்கை எவ்வாறு கையாண்டார் என்பதைக் கருத்தில் கொண்டு, அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. ANI இடம் பேசிய குஷ்பு சுந்தர், "ஒரு பெண் முதல்வர் (மம்தா பானர்ஜி) 14 வயது சிறுமியின் பாலியல் பலாத்காரம் குறித்து கண்டிக்கத்தக்க அறிக்கைகளை வெளியிடுகிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கோருகிறோம், அவர் முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டும்." என்றார். தொடர்ந்து பேசிய பாஜக எம்பி ரேகா வர்மா, "அறிக்கையை நாளை கட்சித் தலைவர் ஜேபி நட்டாவிடம் ஒப்படைப்பேன். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+