தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும் பாஜக... உற்சாகத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் தொண்டர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகத்தில் பாஜக தனிபெரும் கட்சியாக உருவெடுத்து வருவதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கர்நாடக தேர்தல் வாக்கு பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. மற்ற இரு தொகுதிகளுக்கு வேட்பாளர் மரணம், வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் ஆகிய காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக 102 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டது.

தொங்கு சட்டசபை

தொங்கு சட்டசபை

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தொங்கு சட்டசபையே அமையும் என்றும் கருத்து கணிப்புகள் கூறின. அதுபோல் கிங் மேக்கராக மதசார்பற்ற ஜனதா தளம் அமையும் என்றும் கணிக்கப்பட்டது.

பாஜக நம்பிக்கை

பாஜக நம்பிக்கை

ஆனால் பாஜகவோ நாங்கள் 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் சித்தராமையாவோ கருத்து கணிப்புகளை விடுங்க, வார இறுதியை நன்றாக கொண்டாடுங்கள் என்று அசால்ட்டாக இருந்தார்.

எடியூரப்பா மீது குற்றச்சாட்டு

எடியூரப்பா மீது குற்றச்சாட்டு

சுரங்க ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ரெட்டியின் நண்பர் ஸ்ரீராமுலு உள்ளிட்டோருக்கு சீட் கொடுத்தது குறித்து காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்தது. அதுபோல் சுரங்க ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ரெட்டி சகோதரர்கள் ஸ்ரீராமுலுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போதும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

கும்மாளம்

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலு பூஜை, புனஸ்காரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் பாஜக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் உற்சாகமடைந்த தொண்டர்கள் பெங்களூரில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு குவிந்தனர். அங்கு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP workers celebrate outside party office in Bengaluru as trends show the party leading.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற