பாஜக எம்எல்ஏக்கள் கடிதத்துடன் ஆளுநருடன் சந்திப்பு.. ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பா- வீடியோ

  பெங்களூர்: ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் பாஜக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை எடியூரப்பா வழங்கியுள்ளார்.

  மல்லேஸ்வரத்தில் இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடியூரப்பாவை பாஜக எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கையெழுத்துடன் கூடிய கடிதத்துடன், ஆளுநரை ராஜ்பவனில் எடியூரப்பா, ஈஸ்வரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சந்தித்தனர். காலை 11.15 மணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பித்தது.

  BS Yeddyurappa elected as BJP legislative party leader

  அப்போது, ஆளுநரிடம் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் வழங்கப்பட்டது. ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்புவிடுக்க எடியூரப்பா கோரிக்கைவிடுத்தார்.

  நேற்று மாலையில் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து, பாஜகவை ஆட்சியமைக்க கோரிக்கைவிடுத்த நிலையில், இப்போது எம்எல்ஏக்கள் கடிதத்துடன் சென்று மீண்டும் அதை வலியுறுத்தியுள்ளார்.

  இதனிடையே, கர்நாடக பிரஞ்யாவந்த ஜனதா கட்சி (கேபிஜேபி) என்ற சிறு கட்சி சார்பில் ராணிபென்னூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சங்கர், பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்ததாக கூறப்பட்டது. இதனால் பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் பலம் 105ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்ட நிலையில், ்வர் மாலையில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BS Yeddyurappa elected as BJP legislative party leader in Karnataka.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற