கசிந்த மகளின் ஆபாச வீடியோ.. விசாரிக்க சென்ற BSF தந்தை படுகொலை.. 7 பேர் கைது.. குஜராத்தில் ஷாக்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையை (BSF) சேர்ந்தவர் ஒருவர் தனது மகளின் ஆபாச வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்க சென்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் கெடா மாவட்டத்தின் நாடியாத் தாலுகாவில் மெலாஜி வகேலா என்பவர் வசித்து வந்தார். இவர் எல்லை பாதுகாப்பு படையில் 56வது பட்டாலியனில் ஹவால்தாராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவருக்கு ஜம்முவிலிருந்து ராஜஸ்தானுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல 15 நாட்கள் விடுப்பும் கிடைத்திருக்கிறது. இவ்வாறு இருக்கையில் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்க அவர் வீடு திரும்பியுள்ளார்.
ஆனால் இங்குதான் இவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அதாவது, இவருடைய செல்போனில் ஒரு வீடியோ ஒன்று வாட்ஸ்அப் வழியாக வந்துள்ளது. வீடியோவில் இவருடைய 16 வயது மகள் வேறு ஒரு நபருடன் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார். இதனை கண்டு அதிர்ந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்துபோயுள்ளார். பின்னர் மகளிடம் விசாரித்து அந்த நபர் யார் என்று கேட்டு அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆபாச வீடியோ
இந்த சம்பவம் டிசம்பர் 24ம் தேதி நடந்துள்ளது. இவர் தனது இரண்டு மகன்களையும் உடன் அழைத்து சென்றுள்ளார். அங்கு இந்த விவகாரம் குறித்து மெலாஜி கடுமையா பேசியுள்ளார். எதிர் தரப்பில் இருந்தவர்களும் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. மெலாஜி இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் எச்சரித்துள்ளார். புகார் அளிக்கப்பட்டால் தாங்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று அஞ்சிய எதிர் தரப்பினர் மெலாஜியை தாக்க முற்பட்டுள்ளனர்.

தாக்குதல்
முதலில் மர கட்டையை கொண்டு கைகளில் தாக்கியதால் மெலாஜியின் கை எலும்பு உடைந்துள்ளது. இதனை தடுக்க வந்த அவரின் இரண்டு மகன்களையும் இந்த குடும்பத்தினர் தாக்க தொடங்கியுள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த கத்தியை கொண்டு அவரை தாக்கியுள்ளனர். இதில் அவரது தலையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்திருக்கிறார். இதனை கண்டு அஞ்சிய அவரது மகன்கள் அவரை மீட்க போராடியுள்ளனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனை சென்ற நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கைது
அதேபோல உருட்டு கட்டை கொண்டு தாக்கப்பட்டதில் மகன்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதே மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் நதியாட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக மெலாஜியின் மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 7 பேரையும் கைது செய்ய விரைந்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இருப்பினும் ஒரு சில மணி நேரங்களில் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் விளக்கம்
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது, "சிறுமியின் ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க மெலாஜி அவரது மனைவி மஞ்சுளா, இவர்களின் இரண்டு மகன்களில் ஒருவரான நவ்தீப் வகேலா மற்றும் மருமகன் சிராக் வகேலா ஆகியோர் வீடியோவில் இவர்களது மகளுடன் இருந்த நபரான சுனில் ஜாதவ் (20) என்ற ஷைலேஷ் என்பவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். முதலில் மெலாஜியுடன் இரண்டு மகன்களும் சென்றதாக சொல்லப்பட்டது. ஆனால் விசாரணையில் ஒரு மகனும் அவருடைய மருமகனும் சென்றுள்ளனர். இவர்கள் நால்வரும் ஷைலேஷ் வீட்டுக்கு வந்தவுடன் ஆவேசமாக சண்டையிட்டுள்ளனர்.

அரிவாள் வெட்டு
அப்போது ஷைலேஷின் தந்தை தினேஷ் சபாபாய் ஜாதவ் மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களான அரவிந்த் சபாபாய் ஜாதவ், சபாபாய் சதுர்பாய் ஜாதவ், சச்சின் அரவிந்த் ஜாதவ் மற்றும் பவேஷ் சிமன்பாய் ஜாதவ் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். இந்த சம்பவம் நடக்கும்போது இரவு 10 மணி இருந்திருக்கும். இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகாறாரு அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. இது ஒரு கட்டத்தில் உச்சத்தை எட்டியபோது வீட்டிலிருந்த மர கட்டையை கொண்டு சைலேஷின் தந்தை தினேஷ், BSF வீரரும் சிறுமியின் தந்தையுமான மெலாஜியை தாக்கியுள்ளார். இதில்தான் அவரது கைகள் உடைந்துள்ளன.

உயிரிழப்பு
இதனையடுத்து உடன் வந்திருந்த அவரது மகன் மற்றும் மருமகன் மீது அரிவாள் கொண்டு தாக்கியுள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலில் மூவரும் சரிந்துள்ளனர். இதனால் பதறிய மஞ்சுளா மூவரையும் எழுப்ப முயன்றுள்ளார். அப்போது ஷைலேஷ் குடும்பத்தினர் மஞ்சுளாவின் கால் மீது கட்டையை கொண்டு தாக்கியுள்ளனர். கடைசியாக அரிவாள் கொண்டு மெலாஜியை ஒரே போடாக போட்டுள்ளனர். இதுதான் கடைசி நிகழ்வு. இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து புகாரின் பேரில் 7 பேரையும் கைது செய்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications