For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி சர்க்காரின் முதலாவது பட்ஜெட்... எப்படி இருக்கும்? சில எதிர்பார்ப்புகள்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதலாவது பட்ஜெட் எப்படி இருக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மத்திய பட்ஜெட்டில் என்ன மாதிரியான 'மகிழ்ச்சிக்குரிய' அறிவிப்புகள் இடம்பெறலாம் என்பதுதான் மிகப் பெரும் எதிர்பார்ப்பு.

நாடாளுமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று கூடியுள்ளது. ரயில்வே நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது. 10-ந் தேதியன்று பொது நிதிநிலை அறிக்கை தாக்கலாகிறது.

பொதுநிதி நிலை அறிக்கை தாக்கலாவதற்கு முன்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டுவிட்டது. இதனால் தாக்கல் செய்யப்பட இருக்கிற நிதி நிலை அறிக்கையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இருக்கக் கூடும் என்று ஒவ்வொரு துறையினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

சிக்கன நடவடிக்கை

சிக்கன நடவடிக்கை

மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றது தொடக்கம் சிக்கன நடவடிக்கை, அமைச்சக ஊழியர்கள் செயல்பாடுகளில் ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அரசு நிர்வாக 'சீர்திருத்த' அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் செயல்படலாம்.

வருமான வரி

வருமான வரி

நாட்டின் தற்போதைய வருமான வரி செலுத்தும் முறையில் அல்லது வருமான வரி வரம்பில் மாற்றம் கொண்டுவரப்பட வாய்ப்பிருக்கிறது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

நாட்டின் பாதுகாப்பு துறை உள்ளிட்டவற்றில் தாராள அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்குகிற அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறலாம்.

உட்கட்டமைப்பு முன்னுரிமை

உட்கட்டமைப்பு முன்னுரிமை

நாட்டின் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உட்கட்டமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை தரும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி ஏற்கெனவே முடுக்கி விட்டுள்ளார். போக்குவரத்து சார்ந்த அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார். இதனால் உட்கட்டமைப்பு திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

கவர்ச்சி திட்டங்கள்

கவர்ச்சி திட்டங்கள்

முந்தைய காங்கிரஸ் அரசு வெளியிட்டதைப் போல மோடி அரசிடம் கவர்ச்சி திட்டங்களை எதிர்பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.

விவசாயத் துறை

விவசாயத் துறை

கடந்த கால் நூற்றாண்டுகாலமாக கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் விவசாயத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.,

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை, தவறும் பருவ மழை, தேக்க நிலையில் விவசாயம், அதிகரிக்கும் சாலை, ரயில் போக்கு வரத்து கட்டணங்கள், இவை அனைத்தும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும். இதற்கு நிதிநிலை அறிக்கையில் என்ன பதில் இருக்கிறது என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

பணவீக்க கட்டுப்பாடு

பணவீக்க கட்டுப்பாடு

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, வட்டி விகிதத்தை குறைப்பது, நேரடி வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பது ஆகியவற்றுடன் பணவீக்கத்தை கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகளை மோடி அரசு முன்வைக்கப் போகிறது? என்பதும் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

புகை பழக்கம் குறைப்பு

புகை பழக்கம் குறைப்பு

நாட்டில் புகையிலை பழக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்தும் வகையில் அதன் தயாரிப்புகள் அனைத்தின் மீதும் கணிசமான வரி உயர்வு விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

கருப்பு பணம், ஊழல்

கருப்பு பணம், ஊழல்

மோடி அரசு பதவியேற்றது முதலே கருப்பு பண மீட்பு விவகாரத்தில் முன்னுரிமை கொடுத்து வருகிறது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கை, ஊழலற்ற நிர்வாகத்துக்கான செயல்பாடுகள் என மோடி அரசு எதை அறிவிக்கப் போகிறது என்பதும் முதன்மையான எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.

English summary
For millions of Indians, budget announcements are just about whether taxes have gone up or down, but this year, the excitement among taxpayers is palpable as the new Modi government is expected to fulfill its promise of "acche din".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X