பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி.. 36 பேர் படுகாயம்.. மேற்கு வங்கத்தில் சோகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர். 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் இருந்து பலாசே பரா என்ற பகுதிக்கு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அந்தப் பேருந்து கலகட்டா பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

Bus falls into canal, 8 killed in West Bengal

இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து நடைபெற்ற இடத்திற்குத் தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானோர் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Eight people including 4 women killed in bus accident at Nadia district inWest Bengal.
Please Wait while comments are loading...