For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெற்றிக்கொடி நாட்டிய கேப்டன் தமிழ்ச்செல்வன்... மராட்டிய மண்ணில் தமிழர் சாதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    Captain Tamilselvan is the face of victory in maharashtra

    மும்பை: மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் சியோன் கோலிவாடா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழ்ச்செல்வன் 2-வது முறையாக வெற்றிக்கொடி நாட்டி சாதித்துள்ளார்.

    நாடு முழுவதும் மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பெரும் ஆவலாக உள்ள நிலையில் அந்த இரு மாநில தேர்தல் முடிவுகளும் சுடச்சுட வெளியாகி வருகின்றன. மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மஹாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியை கைப்பற்ற உள்ளது.

    captain tamilselvan is the face of victory in maharashtra assembly election

    இந்நிலையில், மும்பையின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான சியோன் கோலிவாடாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் தொடர்ந்து வெற்றி முகத்தில் இருக்கிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ், நவ நிர்மாண் சேனா கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை காட்டிலும் பல மடங்கு வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடுதி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.வாக சியோன் கோலிவாடா தொகுதியில் வெற்றிபெறுவது இது இரண்டாவது முறையாகும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வசித்து வரும் அவர் மீது கட்சி தலைமைக்கு நல்ல அபிப்ராயம் இருக்கிறது. அதன் காரணமாகவே அவருக்கு 2 முறை எம்.எல்.ஏ.சீட் வழங்கினார் அமித்ஷா.

    தமிழ்ச்செல்வன் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றவுடன், அவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரங்களை இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

    Exclusive: ''எம்.எல்.ஏ.சீட் வாங்க யாரையும் காக்கா பிடிக்கவில்லை''- கேப்டன் தமிழ்ச்செல்வன்Exclusive: ''எம்.எல்.ஏ.சீட் வாங்க யாரையும் காக்கா பிடிக்கவில்லை''- கேப்டன் தமிழ்ச்செல்வன்

    இந்நிலையில், கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு புதிதாக அமைய உள்ள அரசில் அமைச்சர் பதவி அளித்தாலும் அதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை. காரணம், தமிழ்ச்செல்வன் மீது தேவேந்திர பட்னாவிஸுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு. இதனால், மராட்டிய அமைச்சரவையில் தமிழரான தமிழ்ச்செல்வனுக்கு இந்தமுறை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

    English summary
    captain tamilselvan is the face of victory in maharashtra assembly election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X