"பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம்" நீதிமன்றத்தை நாடிய சமூக ஆர்வலர்.. நீதிபதி சொன்ன பரபர கருத்து!
அமராவதி: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டால், அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள், அவர்களின் நடவடிக்கைகள், அதனை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ், வீடியோக்கள் என்று இளைஞர்களிடையே கொண்டாட்டத்தில் ஏற்படுத்தும்.
முதல்முதலாக இந்தியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். இதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

விரைவில் சீசன் 6
தமிழ் மொழில் இதுவரை 5 பிக் பாஸ் சீசன்கள் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிக் பாஸ் சீசன் 6 தொடங்க உள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். அண்மையில் இதற்கான புரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் யார் என்ற கேள்வியும் பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

தெலுங்கு பிக் பாஸ்
ஆனால், தெலுங்கில் பிக்பாஸ் 6 சீன தொடங்கி விட்டது. நடிகர் நாகார்ஜுனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். 27வது நாளாக பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக வழக்கு
இது தொடர்பாக சமூக ஆர்வலர் கேத்தி ஜெகதீஸ்வர ரெட்டி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர் சிவபிரசாத் ரெட்டி வாதிட்டார். அதில், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

நீதிபதிகள் கருத்து
தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம் அதிகரித்துவிட்டதாகவும், 1970களில் எந்த மாதிரியான படங்கள் தயாரிக்கப்பட்டன, இப்போது என்ன மாதிரியான படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து, விளக்கமளிக்க மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அவகாசம் கோரினார். இதையடுத்து எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து அடுத்த விசாரணையில் முடிவு செய்யப்படும் என வழக்கு அக்.11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications