For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகுலுக்கு எதிராக போட்டியிடும் ஆம் ஆத்மி விஸ்வாஸ் மேல் வழக்குபதிவு

Google Oneindia Tamil News

அமேதி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் விஸ்வாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் அவரை எதிர்த்து போட்டியிடும் ஆம்ஆத்மியின் குமார் விஸ்வாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்றிரவு மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர். இதனால் அவரது ஆதரவாளர்களுக்கும் , காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Case filed on Aam Aadmi candidate Viswas…

இதன் அடிப்படையில் கலவரத்தை தூண்டியதாக விஸ்வாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 65 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கலவரத்தை தூண்டியது காங்கிரஸார்தான் என விஸ்வாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த் ராகுலின் ஆதரவாளர் சந்திரகாந்த் துபே, இப்பகுதியில் வன்முறையை ஏற்படுத்தவே விஸ்வாஸ் இங்கு வந்துள்ளார். இங்கு நடைபெற்ற கலவரத்திற்கும் எங்களது கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. விஸ்வாஸ் இத்தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுதற்கு முன்னரே பலர் இத்தொகுதியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் மீதும் காங்கிரஸார் தாக்குதல் நடத்தவில்லை" என்று கூறினார்.

English summary
Aam aadmi party’s Amati candidate Viswas hit by some unknown members. So, he argued with congress people. Police filed case on Viswas. He submit nomination oppose to Ragul Gandhi in coming Lokshabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X