For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்போ இந்த மீட்டிங் தேவையா.. மத்திய அரசு மீது தம்பிதுரை அதிருப்தி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துகிறது என்று அதிமுக எம்.பியும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்தார்.

இதுகுறித்து தம்பிதுரை அளித்த பேட்டி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு கால தாமதப்படுத்துவதும் கண்டும் காணாமல் இருப்பதும் வருத்தமளிக்கிறது. காவிரி விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை சார்பில் இன்று 4 தலைமைச் செயலாளர்கள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இது தேவையற்றது.

Cauvery management board: Thambidurai slam Modi government

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை அதிமுக எம்.பிக்கள் முடக்குவோம். இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை வெளிப்படையாக அதிமுக எம்.பிக்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே இதே கோரிக்கையை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக எம்.பிக்கள் தர்ணா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
AIADMK MP and Lok Sabha Deputy Speaker Thambidurai said that setting up the Cauvery management board has been delayed by union government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X