ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்தபோது, 2007-08ம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு இது என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CBI summons Karti Chidambaram to appear

ஒப்புதல் வழங்கியதற்கு பரிசாக கார்த்தி சிதம்பரத்திற்கு, மேற்சொன்ன மீடியா குழுமம், ரூ.90 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியிருந்தது.

PM Modi takes a dig at Manmohan Singh, Chidambaram , Watch Video | Oneindia News

இந்த நிலையில் வரும் 21ம் தேதி டெல்லியிலுள்ள சிபிஐ தலைமையகத்தில், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் காரத்தி சிதம்பரத்திற்கு நெருக்கமானவர்களுக்கு ஏற்கனவே சிபிஐ சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CBI summons KartiChidambaram on Jul 21 in connection with alleged corruption case against him.
Please Wait while comments are loading...