For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'டிஜிட்டல் இந்தியா'வின் அடுத்த அதிரடி... வங்கி காசோலைகளுக்கு வேட்டு வைக்க மத்திய அரசு திட்டம்!

டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் காசோலை நடைமுறைக்கும் மூடுவிழா நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக வங்கி காசோலைகளை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீண் கந்தேல்வால் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 100டி நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்யும் அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதோடு லட்சக்கணக்கான பணப்பரிவர்த்தனையில் நாட்டு மக்கள் சிக்கித் தவித்தனர்.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல அடுத்த அதிரடியான திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் பிரவீண் கந்தேல்வால் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வங்கிகளில் பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் காசோலைகளுக்கு மத்திய அரசு முழுவதும் நிறுத்தக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் முறைக்கு மாற்ற

டிஜிட்டல் முறைக்கு மாற்ற

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற டிஜிட்டல் ரத் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.

கிரெட், டெபிட் பயன்பாட்டை அதிகரிக்க

கிரெட், டெபிட் பயன்பாட்டை அதிகரிக்க

அரசு ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்காகவே ரூ. 25 ஆயிரம் கோடி செலவு செய்கிறது, இதில் ரூ. 6 ஆயிரம் கோடியானது பாதுகாப்பு அம்சங்களுக்காக செலவிடப்படுகிறது. ஆனால் வங்கிகள் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தணைக்கு ஒரு சதவீதமும், கிரெடிட் கார்டை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தணைக்கு 2 சதவீதமும் மட்டுமே கட்டணம் வசூலிக்கின்றன. அரசு இந்த பரிவர்த்தணையை ஊக்குவிக்கும் வகையில் கட்டணத்தை குறைக்க வங்கிகளுக்கு மானியம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மற்றொரு பணமதிப்பிழப்பு

மற்றொரு பணமதிப்பிழப்பு

தற்போதைய நிலவரப்படி 95 விழுக்காட்டு வர்த்தக நடவடிக்கைகள் ரூபாய் நோட்டுகள் அல்லது காசோலைகள் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. எனவே காசோலைகளுக்கும் மூடுவிழா கண்டால் மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகவே இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்பிஐ தகவல்

ஆர்பிஐ தகவல்

பணமதிப்பிழப்பிற்குப் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 100 கோடியை எட்டிய மின்னணுப் பரிமாற்றத்தின் எண்ணிக்கை, தற்போது 87 கோடி என்ற அளவில் நிலைபெற்றிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பிற்குப் பிறகு டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைகள் பெருமளவில் வளர்ச்சியடையவில்லை. எனினும் நவம்பர் 8, 2016க்கு முன்பு இருந்த நிலைமையை விட உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Confederation of All India Traders Secretary General Praveen Khandelwal told that centre may withdraw the cheque book facility in to encourage digital transactions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X