“மக்களிடம் மன்னிப்பு கேளுங்க”.. ராமர் பாலம் விவகாரத்தில் காங்கிரஸ் விளாசல்.. கையை பிசையும் பாஜக
ராய்பூர்: ராமர் பாலம் விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தியதற்காக அவர்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 22ம் தேதி நாடாளுமன்றத்தில் ஹரியானா எம்பி கார்த்திகேய ஷர்மா ராமர் பாலம் தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். அதாவது, ராமர் பாலம் குறித்த பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறீர்கள் இந்த ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது? என்பதுதான் அந்த கேள்வி. இதற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்திருந்தார்.
அந்த பதிலில், "ராமர் பாலம் குறித்து இஸ்ரோ உதவியுடன் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த பாலம் அமைந்திருந்ததாக சொல்லப்பட்ட இடம் துல்லியமாக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்தபோது ராமேஸ்வரத்திலிருந்து தலை மன்னார் வரை உள்ள இந்த திட்டுக்கள் சுண்ணாம்பு கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. நாம் நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஹரப்பா நாகரிகத்தை கூட நாம் கண்டுபிடித்துள்ளோம்.

ஆதாரம் இல்லை
ஆனால் சுமார் 18,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான வரலாறு இந்த ராமர் பாலம் என்பதால் இது குறித்து ஒரு இறுதி முடிவுக்கு எங்களால் வர இயலவில்லை. இராமேஸ்வரத்திற்கும், தலை மன்னாருக்கும் இடையே 56 கி.மீ இருக்கிறது. இவ்வளவு தொலைவில் ஏற்கெனவே கட்டப்பட்டதாக நம்பப்படும் பாலத்தின் சில எச்சங்கள் மட்டுமே தற்போது மீதமிருக்கிறது. மிகச் சரியாக சொல்வதெனில் இங்குள்ள கட்டுமானம் எந்த மாதிரியான கட்டுமானம் என்பது தெரியவில்லை. எனவே இங்கு இருந்தது ராமர் பாலம்தான் என்பதை சரியாக கூறமுடியாது" என்று தெரிவித்திருந்தார்.

சர்ச்சை
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ராமர் பாலம் என்று சொல்லப்படும் சுண்ணாம்பு திட்டுக்களை அகற்றி அந்த வழியாக கப்பல் போக்குவரத்தை சாத்தியமாக்க கடந்த 2005ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் செயல் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. ஏனெனில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வங்கக் கடலின் கரையோரம் இருக்கும், சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய துறை முகங்களுக்கு வரும் கப்பல்கள் அனைத்தும் இலங்கையை சுற்றிக்கொண்டுதான் வரவேண்டும். இதனால் அதிகமான எரிபொருள் வீணாகும்.

பயன்கள்
இந்த திட்டம் சாத்தியமானால் இந்தியாவுக்கு கணிசமான அளவில் அந்நிய செலவானி சேமிக்கப்படும். ஐரோப்பியாவிலிருந்து வரும் கப்பல்கள் சுமார் 30 மணிநேரத்திற்கு முன்னரே இலக்கை அடையலாம். மிக முக்கியமாக தூத்துக்குடி துறைமுகம் மிகப்பெரிய வளர்ச்சி பெரும். ஆனால் இந்த திட்டத்தை எதிர்க்க முதல் ஆளாய் வந்து நின்ற கட்சிதான் பாஜக. பாஜக தலைவர்கள் இந்த திட்டம் இந்துக்களுக்கு எதிரான திட்டம் என்று அறிவித்தனர். எனவே இதனை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் பாஜக அமைச்சரின் விளக்கம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னிப்பு
இது குறித்து சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், "ராமர் பால விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தியதற்காக அவர்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும். கடந்த காலங்களில் காங்கிரசும் ராமர் பாலம் என்று ஒன்று கிடையாது என்றுதான் கூறியது. ஆனால் எங்களை ராமர் எதிர்ப்பாளர்களாக பாஜகவினர் சித்தரித்தனர். ஆனால் தற்போது ராமரின் உண்மையான பக்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களே நாடாளுமன்றத்தில் இப்பாலம் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்கள். தற்போது இவர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜக அமைச்சரின் இந்த கருத்துக்கு விமர்சனம் எதையும் தெரிவிக்கவில்லை. இதனை சுட்டிக்காட்டிய அவர், "ஆர்எஸ்எஸ்காரர்கள் உண்மையான ராமர் பக்தர்களாக இருந்தால் அவர்கள் மத்திய அரசை விமர்சித்திருப்பார்கள்" என்றும் விமர்சித்துள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications