விரைவில் மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரி.. உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதாலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி என்பதாலும் இரட்டை என்ஜின் போல இந்த அரசு செயல்படுகிறது என்று பாஜக கூறி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதால் இந்த ஆட்சி டபுள் என்ஜினிலிருந்து ட்ரிபிள் என்ஜின் ஆட்சியாக பரிணமித்துள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறி வருகிறார்.

இந்நிலையில் நேற்று கூட்டம் ஒன்றில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் நலத்திட்டங்கள் அனைத்தும் விளிம்புநிலை மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. இந்த அரசின் திட்டங்களை பெறாதவர்கள் யவரும் இருக்கக்கூடாது என்றுதான் நாங்கள் யோசிக்கிறோம். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடையாது. எனவே அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளி மாநிலங்களில் வேலைக்காக புலம் பெயர் தொழிலாளர்களாக சென்றனர். அங்கு கொத்தடிமை போல நடத்தப்பட்டனர். சரியான உணவு, இருப்பிடம், சுயமரியாதை, சம்பளம் என எதுவும் முறையாக இல்லாமல் தவித்தனர். ஆனால் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் இந்த நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொழில் வளர்ச்சிக்கு இப்படி கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே சமூக வளர்ச்சிக்கும் இந்த பாஜக அரசு முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் மருத்துவ கல்லூரியை உருவாக்க போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படை பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
தனியார் மருத்துவமனைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகள் சிறப்பான சேவைகளை வழங்கும். இதன் மூலம் மருத்துவ துறையில் ஓர் ஆரோக்கியமான போட்டி ஏற்படும். இது மக்களுக்கு நல்ல முறையில் பலனளிக்கும்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications