For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லடாக்கில் பீரங்கிகளை இறக்கிய சீனா.. மலைகளிலிருந்து உளவு பார்க்கும் இந்தியா.. ஏவுகணைகள் குவிப்பு!

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கில் அதி நவீன பீரங்கிகளை சீனா களமிறக்கி உள்ளது, சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா அங்கு ஏவுகணைகளை கொண்டு வந்துள்ளது.

லடாக்கில் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அங்கு பாங்காங் திசோ அருகே இருக்கும் டெப்சாங் மலை முகடுகள், டாக்குங் மலை பகுதிகள், முஃபாரி மலை பகுதிகளை இந்தியா கைப்பற்றி உள்ளது.

இதனால் சண்டைக்கு முன்பாகவே இந்தியா தனக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு உள்ளது. இன்னொரு பக்கம் சீனா தாழ்வான நிலப்பகுதிகளிலும், நீர் பகுதிகளுக்கு இடையில் உள்ள பகுதிகளையும் கட்டுப்படுத்தி வருகிறது.

கிழக்கு லடாக்....இந்தியப் பகுதியில் சாலை அமைக்கும் சீனா... அதிர்ச்சி சாட்டிலைட் புகைப்படங்கள்!!கிழக்கு லடாக்....இந்தியப் பகுதியில் சாலை அமைக்கும் சீனா... அதிர்ச்சி சாட்டிலைட் புகைப்படங்கள்!!

சீனா எங்கே

சீனா எங்கே

சீனா தற்போது பாங்காங் திசோ அருகே இருக்கும், பிளாக் டாக், ஹெல்மெட் ஆகிய பகுதிகளை பிடித்துள்ளது. அதேபோல் பாங்காங் திசோவின் தெற்கு பகுதியில் இருக்கும் இருக்கும் மால்டோ அருகே உள்ள பகுதியிலும் சீனா படைகளை குவித்து வருகிறது. தற்போது அங்கு சீனா நவீன ஆயுதங்களை களமிறக்கி வருகிறது. அதாவது தற்போது மலை பகுதிகள் இந்தியா வசமும், நதிகளுக்கு அருகே இருக்கும் தரை பகுதிகள் சீனா வசமும் உள்ளது.

டேங்கர்கள்

டேங்கர்கள்

லடாக்கில் நவீன பீரங்கிகளை சீனா களமிறக்கி உள்ளது. இந்த பீரங்கிகள் அதிக சக்தி வாய்ந்தது ஆகும். மலை முகடுகளை சுற்றி இருக்கும் பகுதிகளில் சீனா இப்படி பீரங்கிகளை குவித்து உள்ளது. 10க்கும் அதிகமான பீரங்கிகளை தற்போது அங்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அதேபோல் நவீன துப்பாக்கிகள், சிறிய சிறிய ஏவுகணைகளை சீனா கொண்டு வந்துள்ளது .

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் சீனாவின் இந்த பீரங்கிகளை இந்தியா கண்காணித்து வருகிறது. நாம் ஏற்கனவே மலை பகுதிகளை பிடித்துவிட்ட காரணத்தால் அங்கிருந்து சீனாவின் டேங்கர்களை இந்தியா கண்காணித்து வருகிறது. இந்த மலை பகுதிக்கு இந்தியா ஏற்கனவே நவீன ஆயுதங்களை கொண்டு வந்துள்ளது. இங்கிருந்து சீனாவின் அனைத்து செயலையும் இந்தியா கண்காணித்து வருகிறது.

ஒவ்வொரு செயலும்

ஒவ்வொரு செயலும்

சீனாவின் ஒவ்வொரு செயலையும் இந்தியா நுணுக்கமாக கண்காணித்து உடனுக்குடன் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது.. இதனால் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கீழ் பகுதியில் பீரங்கிகளை கொண்டு வந்துள்ளது. இங்கிருந்து இந்தியா கடந்த மாதம் தனது பீரங்கிகளை எடுத்து சென்றது. தற்போது மீண்டும் அதே இடத்தில் இந்தியா தனது பீரங்கிகளை கொண்டு வந்துள்ளது.

ஏவுகணைகள் குவிப்பு

ஏவுகணைகள் குவிப்பு

அதேபோல் சீனாவின் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியா கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் T-90 மற்றும் T-72M1 ஆகிய ஏவுகணை பீரங்கிகளை இந்தியா இறக்கி உள்ளது. இந்த பீரங்கிகளில் இருந்து ஏவுகணைகளை ஏவி, எதிரி நாட்டு டேங்கர்களை தாக்கி அழிக்க முடியும். சீனாவின் பீரங்கிகளை மொத்தமாக காலி செய்யும் வகையில்இந்தியா இதை அங்கு களமிறக்கி உள்ளது.

English summary
China standoff with India: PLA brings Tanks to the border, India sets up anti-tank missiles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X