For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லடாக் மோதல்.. இன்று மிக முக்கிய முடிவு எடுக்கும் அரசு.. அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி மீட்டிங்!

Google Oneindia Tamil News

லடாக்: இன்று லடாக் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடக்க உள்ளது. அனைத்து மாநில மற்றும் தேசிய கட்சி பிரதிநிதிகள் உடன் பிரதமர் மோடி பேச இருக்கிறார்.

இந்தியா - சீனா இடையிலான லடாக் பிரச்சனை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள். லடாக்கில் எப்போது வேண்டுமானாலும் பெரிய அளவில் சண்டை நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். சீனாவும் அங்கு படைகளை குவித்து வருகிறார்கள்.

China standoff with India: PM Modi to hold all-party meeting today

இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளது. நேற்று இரண்டு நாட்டு எல்லையில் நடந்த மேஜர் லெவல் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்கள் முன் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு எதிராக சண்டை நடந்தது. அங்கு மூன்று நாட்கள் முன் நடந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை மேஜர்கள் மற்றும் முப்படை தளபதி பிபின் ராவத் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின் அவர் பிரதமர் மோடியை சந்தித்து விவரங்களை தெரிவித்தார். இந்த சந்திப்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் , ஜெய்சங்கர், அமித் ஷா, ராஜ்நாத் சிங் இந்த மீட்டிங்கில் உடன் இருந்தனர்.

41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணி.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.. முக்கிய தகவல்கள் 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணி.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.. முக்கிய தகவல்கள்

Recommended Video

    India vs China Super power comparison

    இந்த நிலையில் இன்று லடாக் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடக்க உள்ளது. அனைத்து மாநில மற்றும் தேசிய கட்சி பிரதிநிதிகள் உடன் பிரதமர் மோடி பேச இருக்கிறார். இன்று நடக்கும் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி மட்டும் கலந்து கொள்ளாது.

    லடாக் எல்லை பிரச்சனை குறித்து இன்று மிக முக்கியமான முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று இன்று தெரியவரும்.

    English summary
    China standoff with India: PM Modi to hold all-party meeting today amid raising tension.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X