For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜடேஜாவுக்கு தடையா? இந்திய ஜெர்சியுடன் பாஜக பிரச்சாரம்! பிசிசிஐக்கு தர்ம சங்கடம் - வலுக்கும் புகார்

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் மாநில தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் தனது மனைவிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா வாக்கு சேகரித்து வெளியிட்ட போஸ்டரில் இந்திய அணியின் சீருடையுடன் இருக்கும் அவரது புகைப்படம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

வரும் டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

தினமும் 12 மணிநேர பிரசாரம்.. தம்பி மனைவியை தோற்கடிக்கணும்.. குஜராத் தேர்தலில் ஜடேஜா அக்காள் தீவிரம்தினமும் 12 மணிநேர பிரசாரம்.. தம்பி மனைவியை தோற்கடிக்கணும்.. குஜராத் தேர்தலில் ஜடேஜா அக்காள் தீவிரம்

 வேட்பாளர் பட்டியல்

வேட்பாளர் பட்டியல்

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை கொண்ட பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் கட்லோதியா தொகுதியிலும், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி மஜுரா தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.

ரிவாபா ஜடேஜா

ரிவாபா ஜடேஜா

இந்த தேர்தகுக் இந்திய கிரிக்கெட் அணியில் பிரபல ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. தர்மேந்திரசிங் ஜடேஜாவுக்கு சீட் மறுக்கப்பட்டு அவருக்கு மாற்றாக ரிவாபாவை அக்கட்சி தேர்வு செய்து உள்ளது.

பிரதமர் மோடிக்கு நன்றி

பிரதமர் மோடிக்கு நன்றி

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தனது மனைவிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ஜடேஜா, "எனது மனைவிக்கு வாழ்த்துக்கள். உங்கள் கடின உழைப்பை நினைத்து மகிழ்கிறேன். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுங்கள். இவர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவுக்கு நன்றி." என்று தெரிவித்தார்.

ஜடேஜா வேண்டுகோள்

ஜடேஜா வேண்டுகோள்

அதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதி மக்கள் தனது மனைவிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு வீடியோ ஒன்றையு வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பேசிய அவர், "டி20 கிரிக்கெட் போட்டியை போன்றது குஜராத் தேர்தல். ஜாம்நகர் மக்களும், அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அதிகளவில் எனது மனைவிக்காக வாக்களிக்க வேண்டும்." என கேட்டுக்கொண்டார்.

யார் இந்த ரிவாபா?

யார் இந்த ரிவாபா?

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜடேஜாவை ரிவாபா திருமணம் செய்துகொண்டார். மெக்கானிக்கல் எஞ்சினியரின் படித்து இருக்கும் இவருக்கு தற்போது 32 வயதாகிறது. காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஹரிசிங் சோலன்கியின் உறவினரான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இவருக்கு சவுராஷ்டிரா பகுதியில் அதிக ஆதரவு கிடைக்கும் என்பது பாஜக தலைமையின் நம்பிக்கை.

விதிமீறலா?

விதிமீறலா?

தற்போது காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா தனது மனைவியை வெற்றிபெற வைப்பதற்காக பாஜகவுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி ரிவாபா ஜடேஜா இந்திய கிரிக்கெட் அணி ஜெர்சியில் இருக்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்து வாக்களிக்குமாறு கோரி இருக்கிறார். இதுதான் தற்போது பிரச்சனையாகி இருக்கிறது.

பிசிசிஐக்கு கோரிக்கை

பிசிசிஐக்கு கோரிக்கை

இதுகுறித்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் நிர்வாகி பிரஷாந்த் கனோஜியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பிசிசிஐ ஒப்பந்தத்தின் படி எந்த அரசியல் கட்சிக்காகவும் பிரச்சாரம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும். இந்திய கிரிக்கெட் சீருடையை அணிந்துகொண்டு அரசியல் கட்சிக்கு பிரச்சாரம் செய்கிறார். பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

English summary
A poster of Indian cricketer Ravindra Jadeja in support of his wife, who is contesting for the BJP in the Gujarat state election, has sparked controversy with his photo in the Indian team uniform.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X