கட்சி மாறி ஓட்டு: குஜராத் ராஜ்யசபா தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திடம் காங். வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத்தில் இன்று நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை தோற்கடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்தது பாஜக.

Congress demands EC to cancel Gujarat Rajya Sabha polls

இன்று காலை வாக்குப் பதிவு நடைபெற்ற போது 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நாங்கள் பாஜகவுக்குதான் வாக்களித்தோம் என பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தனர். இதனால் அகமது படேலின் வெற்றி கேள்விக்குறியானது.

இந்நிலையில் குஜராத் ராஜ்யசபா தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜகவுக்கு தான் வாக்களித்தோம் என இரு எம்.எல்.ஏக்கள் பகிரங்கமாக பேட்டியளித்தனர். அவர்களது வாக்குகள் செல்லாது என அறிவித்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress has demaned thath the cancel of the Gujarat Rajya Sabha Polls today.
Please Wait while comments are loading...