For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அய்யோ பாவம்! குஜராத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான இடங்களைக் கூட பெற முடியாத காங்கிரஸ்!

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, அம்மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான இடங்களைக் கூட பெற முடியாத பரிதாப நிலையில் உள்ளது.

182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின்படி, பாஜக 103 இடங்களிலும் காங்கிரஸ் 9 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும் வென்றுள்ளது. மேலும் பாஜக 53 தொகுதிகளிலும் காங்கிரஸ் 8; ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது.

Congress may lose Leader of Opposition position in Gujarat Legislative Assembly

இதனடிப்படையில் குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு 156; காங்கிரஸ் கட்சிக்கு 17; ஆம் ஆத்மிக்கு 5 இடங்கள் கிடைக்கும். 1985-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 141 இடங்களைப் பெற்றதுதான் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது பாஜக முறியடித்துள்ளது. மேலும் கடந்த 1995-ம் ஆண்டு முதல் இதுவரையில் பாஜக எந்த ஒரு தேர்தலிலும் தோல்வியையே சந்திக்கவும் இல்லை.

 ராகுல் காந்தி VS பிரியங்கா.. சகோதரனை விஞ்சி சாதித்த 'சிங்கப்பெண்!' குஜராத், இமாச்சல் சொல்லும் பாடம் ராகுல் காந்தி VS பிரியங்கா.. சகோதரனை விஞ்சி சாதித்த 'சிங்கப்பெண்!' குஜராத், இமாச்சல் சொல்லும் பாடம்

2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு கடும் போட்டியை கொடுத்திருந்தது காங்கிரஸ். ஆனால் இப்போதைய தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது காங்கிரஸ். அத்துடன் மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட காங்கிரஸுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. குஜராத் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற காங்கிரஸுக்கு 20 எம்.எல்.ஏக்கள் தேவை. தற்போதைய நிலவரப்படி 17 எம்.எல்.ஏக்கள்தான் காங்கிரஸுக்கு கிடைக்கக் கூடும். அதனால் மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பெற முடியாத பரிதாபத்துக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது.

2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களிலும் கூட காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளின் அளவுக்குதான் இடங்களைப் பெற்றது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற முடியாத நிலையில் உள்ளது. இப்போது மாநிலங்களிலும் கூட அதே துயர நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டிருப்பது அக்கட்சியின் தொண்டர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

English summary
According to the election results, Congress may lose Leader of Opposition position in the Gujarat Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X