குஜராத் சட்டசபையில் அடிதடி.. பாஜக எம்எல்ஏவை மைக்கை பிடுங்கி காங்கிரஸ் எம்எல்ஏ தாக்கியதால் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் சட்டசபையில் பாஜக - காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே ஏற்பட்ட அடிதடியால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் அசரம் பாபு வழக்கு குறித்த நீதிபதி டிகே திரிவேதி கமிஷனின் அறிக்கையை வீசி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும் பாஜக எம்எல்ஏக்களும் அமளியில் ஈடுபட்டனர்.

Congress MLAs attacked BJP MLAs in the Gujarat assembly

அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ பிரதாப் டுதட் திடீரென அங்கிருந்த மைக்கை பிடுங்கி பாஜக எம்எல்ஏ ஜெகதீஷ் பஞ்சாலை தாக்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ அம்ரீஷ் தெர் பாஜக எம்எல்ஏக்களை தாக்கினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டாக அம்ரீஷ் தெரை துவைத்தெடுத்தனர்.

குஜராத் சட்டசபையில் நடைபெற்ற இந்த அடிதடியால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ruckus in Gujarat Assembly. Congress MLAs attacked BJP MLAs in the assembly.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற