For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு- விடிய விடிய நடந்த காங்.வழக்கில் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பட்டியலுடன் மைசூர் சாலையில் உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கும்படி கோரியுள்ளது. அதையடுத்து அதிகாலை 1.45 மணிக்கு துவங்கி, 2.30 மணிநேரம் நடந்த வாதத்தைத் தொடர்ந்து, எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆளுநர் அழைப்பு

கர்நாடகா முதல்வராக பாஜக தலைவர் எடியூரப்பா வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பதவியேற்க உள்ளார்.

உரிமை கோரிய குமாரசாமி

எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி.

போராட்டம்

கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலாவை ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தினர். அதேநேரத்தில் ஆளுநர் மாளிகை முன்பாக பாஜகவை கண்டித்து ஜேடிஎஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

அணிவகுப்பு?

ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரையும் ஆளுநர் முன்பாக அணிவகுக்க காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால் அணிவகுப்புக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே போராட்டம் நடத்த காங்கிரஸ்- ஜேடிஎஸ் எம்,.எல்.ஏக்கள் திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடகாவில் யார் ஆட்சியமைப்பது என்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணி மாறுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்கள் பெயர் சரிபார்க்கப்பட்டு பேருந்துகள் மூலம் ரிசார்ட்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். ஏற்கனவே மணிப்பூர், மேகாலயா மற்றும் கோவாவில் பாஜக பின்பற்றிய ஃபார்முலாவை கையிலெடுத்து ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ்.

இந்நிலையில் கூவத்தூர் ஃபார்முலாவை கையிலெடுத்து எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் பணியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

Newest First Oldest First
4:34 AM, 17 May

எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க முடியாது
4:34 AM, 17 May

விடிய விடிய நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
2:10 AM, 17 May

உச்சநீதிமன்ற அறை எண் 6-ல் விசாரணை நடைபெறுகிறது
1:56 AM, 17 May

சுப்ரீம்கோர்ட் முன் காங். தொண்டர்கள் குவிந்தனர்
1:50 AM, 17 May

உச்சநீதிமன்றத்தில் காங். மனு மீதான விசாரணை தொடக்கம்
1:32 AM, 17 May

மனுவை விசாரிக்க நீதிபதி ஒப்புதல்
1:31 AM, 17 May

அதிகாலை 1.45 மணிக்கு காங். வழக்கு மீது விசாரணை
1:29 AM, 17 May

காங். மனு மீது இன்னும் சிறிதுநேரத்தில் விசாரணை
11:53 PM, 16 May

எடியூரப்பா பதவி ஏற்க தடை கோரி காங், ஜேடிஎஸ் வழக்கு
11:53 PM, 16 May

காங், சார்பில் அபிஷேக் சிங்வி வாதாட உள்ளார்
11:53 PM, 16 May

தலைமை நீதிபதி அனுமதித்தால் நள்ளிரவில் விசாரணை
11:40 PM, 16 May

காங். எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் ஈகிள்டன் ரிசார்ட்டில் ஜேடிஎஸ் குமாரசாமி முகாம்
11:40 PM, 16 May

பெங்களூருவில் எடியூரப்பா இல்லம் முன்பு போலீஸ் குவிப்பு
11:26 PM, 16 May

எடியூரப்பா முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு- உச்சநீதிமன்றத்தில் காங். வழக்கு
11:26 PM, 16 May

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அவசர வழக்காக தாக்கல் செய்தது காங்கிரஸ்
11:26 PM, 16 May

காங்கிரஸ் அவசர வழக்கு மீது நள்ளிரவில் விசாரணை நடைபெறுகிறது
10:39 PM, 16 May

பாஜகவுக்கு அழைப்பை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு
10:39 PM, 16 May

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அவசர வழக்காக விசாரிக்க மனு
9:42 PM, 16 May

எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு
9:42 PM, 16 May

ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
9:42 PM, 16 May

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம்
9:06 PM, 16 May

எடியூரப்பா நாளை காலை முதல்வராக பதவியேற்பதாக வெளியிட்ட டுவிட் டெலிட்
9:06 PM, 16 May

டுவிட்டை டெலிட் செய்தார் சுரேஷ்குமார்
9:06 PM, 16 May

கர்நாடக பாஜகவும் வெளியிட்ட டுவிட்டை டெலிட் செய்தது
8:47 PM, 16 May

கர்நாடகா ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
8:47 PM, 16 May

ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு அழைப்பு- ஆளுநர் மாளிகை
8:38 PM, 16 May

எடியூரப்பா மே 27-ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கெடு
8:18 PM, 16 May

எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார்
8:17 PM, 16 May

கர்நாடக முதல்வராகிறார் எடியூரப்பா
8:17 PM, 16 May

ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு
READ MORE

English summary
Sources said that cording Congress will move Supreme Court if the Governor does not invite the JD(S)-Congress combine to stake claim to form the government in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X