For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸின் 2வது கட்ட வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Congress old hands for Rajya Sabha elections
டெல்லி: வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற டெல்லி ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்தன் திவேதி நேற்று டெல்லியில் இதனை வெளியிட்டார்.

அதன்படி, ஆந்திராவில் கே.வி.பி.ராமச்சந்திரராவ், எம்.ஏ.கான், டி.சுப்பிராமி ரெட்டி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், குஜராத்தில் மதுசூதன் மிஸ்திரியும், மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்..

டெல்லி முதல்வராக 15 வருடங்கள் பணியாற்றிய ஷீலா தீட்சித் இமாச்சல பிரதேசம் அல்லது அரியானாவில் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இமாச்சல பிரதேசத்தில் விப்லவ் தாகூர் வெட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து நேற்று 2-வது கட்டமாக அறிவிக்கப்பட்ட 5 வேட்பாளர்களிலும் ஷீலா தீட்சித் பெயர் இல்லை. எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் அரியானாவுக்கு அவரது பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Congress has nominated its general secretary Digvijaya Singh to Rajya Sabha, indicating that the party would prefer the senior leader to focus on his responsibility as in charge of key states of Andhra Pradesh and Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X