"க்யா க்யா கும் கும்"... சொன்னபடி வெளியான ராகுலின் "அட்டாக்கிங்" போட்டோஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  "க்யா க்யா கும் கும்"... ராகுலின் "அட்டாக்கிங்" போட்டோஸ்!- வீடியோ

  டெல்லி : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஜப்பானிய தற்காப்புக் கலையான அய்கிடோ பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அவரது கட்சியினர் இந்த புகைப்படங்களை ரீடுவீட் செய்துள்ளனர்.

  47 வயது ராகுல்காந்தி அண்மையில் ஒரு மாநாட்டில் பங்கேற்ற போது குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ராகுல்காந்தியிடம் அவர் உடற்பயிற்சி செய்கிறாரா என்று கேள்வியை எழுப்பினார். இதற்கு உற்சாகமாக பதிலளித்த ராகுல்காந்தி தான் தினமும் 1 மணி உடற்பயிற்சி செய்வாகவும் ஜப்பானிய தற்காப்புக் கலையான அய்கிடோவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளதாகவும் கூறினார்.

  இதனையடுத்து ஏன் அந்தப் புகைப்படங்களை வெளியிடுவதில்லை, அரசியலில் இருக்கும் தலைவர்கள் உடற்பயிற்சி செய்வது மற்றவர்களுக்கு ரோல்மாடலாக இருக்கும் என்று விஜேந்தர் கூறி இருந்தார். அப்போது விரைவில் புகைப்படங்களை வெளியிட முயற்சிப்பதாக ராகுல் கூறி இருந்தார்.

  டுவிட்டரில் வெளியீடு

  இந்நிலையில் அய்கிடோ அகிகாய் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் பயிற்சியாளர் பரிடோஸ் கர் டன் ராகுல் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சி அந்தப் புகைப்படங்களை ரீடுவீட் செய்துள்ளது.

   ராகுல் படத்திற்கு குவியும் லைக்ஸ்

  ராகுல் படத்திற்கு குவியும் லைக்ஸ்

  பயிற்சியாளருடன் படு சீரியஸாக ராகுல் காந்தி அய்கிடோ பயிற்சியை செய்கிறார். தற்காப்புக் கலைக்கான பாரம்பரிய உடையில் ராகுல் தோன்றும் அந்தப் புகைப்படங்கள் டுவிட்டரில் 900க்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றுள்ளது.

   பரபரப்பை ஏற்படுத்திய டுவீட்

  பரபரப்பை ஏற்படுத்திய டுவீட்

  அண்மையில் ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு பதிலாக கருத்துகள் பதிவிடப்படுவாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலடியாக ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் எனக்காக யார் டுவிட் செய்கிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். நான் தெளிவாக சொல்கிறேன். இது தான் (நாய்) என்னோடு இருக்கிறது. நான் தான் டுவிட் செய்கிறேன் என்று கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார்.

   டுவிட்டரில் ஸ்டாராகும் ராகுல்

  டுவிட்டரில் ஸ்டாராகும் ராகுல்

  வீடியோவில் அவரது நாய் பிஸ்கெட் சாப்பிடும் காட்சி இடம் பெற்று இருந்தது. இந்த டுவீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் ராகுலின் அய்கிடோ புகைப்படங்கள் அவருக்கு பெருமையை சேர்த்துள்ளன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Congress party retweeted the photos of Congress vice president Rahul Gandhi practising Aikido as he recently promised to take steps to release his physical fitness activities photos.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற