For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவை "குணப்படுத்தும்" 4 வகையான ஆயுர்வேத மருந்துகள் இலவசம்.. ஆந்திராவில் அலைபாயும் கூட்டம்!

Google Oneindia Tamil News

அமராவதி: கொரோனா குணமாக மூலிகை லேகியம் கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள சிறிய கிராமமான கிருஷ்ணபட்டினத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணபட்டினத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனாவுக்கான மூலிகை லேகியம் கொடுக்கப்படுவதால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வருகிறார்கள்.

இந்த மருந்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பேனிகி ஆனந்தய்யா தயாரித்து இலவசமாக மக்களுக்கு கொடுத்து வருகிறார். இவர் அந்த லேகியத்தில் தேன், மிளகு, பச்சை கற்பூரம், ஜாதிக்காய், கருஞ்சீரகம், பட்டை உள்பட சில மூலிகைகளை போட்டு தயார் செய்து வருகிறார்.

தினமும் கோமியம் குடிப்பேன்-கொரோனா தாக்கவில்லை- மீண்டும் சர்ச்சையில் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் தினமும் கோமியம் குடிப்பேன்-கொரோனா தாக்கவில்லை- மீண்டும் சர்ச்சையில் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர்

மல்லம் கிராமம்

மல்லம் கிராமம்

நாயுடுபேட்டையில் மல்லம் கிராமத்தில் ரயில்வே ஒப்பந்ததாரர் துவ்வுரு ராம ராகவா ரெட்டி கூறுகையில் இவர் கொடுத்த லேகியத்தை குடித்ததால் எங்கள் கிராமத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை. இந்த மருந்தை பாட்டிலில் வாங்கி கொண்டு போய் எங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தோம்.

ஆனந்தய்யா

ஆனந்தய்யா

கொரோனா நோயாளிகளுக்கும் கொடுத்தோம். அவர்கள் குணமடைந்துவிட்டார்கள். ஆனந்தய்யாவுக்கு 40 கிலோ தேன் மற்றும் ரூ 1 லட்சம் மதிப்பிலான ஆயுர்வேத மூலிகைகளை கொடுத்தோம். அதை வைத்து அவர் மருந்து உருவாக்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார் என்றார்.

ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

அது போல் மல்லம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் கூறுகையில் எங்கள் 70 வயது பாட்டிக்கு கடந்த புதன்கிழமை வரை ஆக்ஸிஜன் உதவியுடன் இருந்தார். அவரது கண்களில் ஆனந்தய்யாவின் மருந்தை சில சொட்டுகள் விட்டவுடன் தற்போது ஆக்ஸிஜன் உதவியில்லாமல் வீடு திரும்பியுள்ளார் என்கிறார்.

தம்பதி

தம்பதி

அது போல் இரு தினங்களுக்கு முன்னர் ஒரு தம்பதிக்கு ஆக்ஸிஜன் அளவு 70 சதவீதம் சென்றுவிட்டது. அவர்களுக்கு இந்த மருந்து கொடுத்ததால் 98 சதவீதமாக ஆக்ஸிஜன் அளவு உயர்ந்துள்ளது என்கிறார்கள். இந்த அற்புத மருந்தை 50 ஆயிரம் பேருக்கு கொடுத்திருக்கிறார்கள்.

மோசம்

மோசம்

இதுகுறித்து ஆனந்தய்யா கூறுகையில் கொரோனா நோயாளிகளை சரி செய்ய 4 வகையான ஆயுர்வேத மருந்துகளை நான் தயார் செய்கிறேன். P, F, L, K ஆகிய சமிக்ஞைகள் சூட்டியுள்ளேன். P மருந்து நுரையீரலில் உள்ள தொற்றை குணப்படுத்தும். F மருந்து உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும், L நுரையீரல் செயல்பாட்டை தூண்டிவிடும். K மருந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ஆக்ஸிஜன் கருவி

ஆக்ஸிஜன் கருவி

கண்களில் விடும் மருந்து ஆக்ஸிஜன் அளவு குறைவால் பாதிக்கப்பட்ட மூளையை செயல்பட வைக்கிறது. மேலும் ஆக்ஸிஜன் கருவியை நோயாளி சார்ந்திருப்பதை குறைக்கிறது என்கிறார். குருவய்யா சுவாமியின் தீவிர பக்தர் ஆனந்தய்யா. மேலும் சென்னையில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் கைதேர்ந்த டாக்டர் விவேகானந்தாவிடம் இருந்து கற்றுக் கொண்டார். எனினும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்ய மருத்துவக் குழுவினர் விரைந்துள்ளனர்.

English summary
Covid victims gathered a tiny village for miracle medicine in Andhra Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X