For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆல் ரவுண்டராக ஜொலிக்கும் அஸ்வின்.. இந்திய கேப்டன்சிக்கு தகுதியானவர்.. ராகுலால் கொதிக்கும் ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

டாக்கா: இந்திய அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக உருவெடுத்துள்ள அஸ்வினை, சில ஆண்டுகளுக்கு டெஸ்ட் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். எப்படி கும்ப்ளே இந்திய அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி தோனியின் கைகளில் ஒப்படைத்தாரோ, அதேபோல் அஸ்வின் இந்திய அணியை வழிநடத்தி இளம் வீரரிடம் ஒப்படைக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ளது.

அதிலும் 74 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது. 7 விக்கெட்டுகள் சரிந்தாலும், அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் ப்ரஷர் இல்லாமல் ஆடியது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

இதனிடையே கேஎல் ராகுலின் கேப்டன்சி குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. எதற்காக சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளத்தில், குல்தீப் யாதவை பெஞ்ச் செய்துவிட்டு, மூன்று வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்கினார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து, ஒவ்வொரு டெஸ்ட் தொடரின் போதும் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். இதனால் துணை கேப்டனான கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

அஸ்வினின் சாதனை

அஸ்வினின் சாதனை


இதுவரை 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 449 விக்கெட்டுகள் மற்றும் 3,043 ரன்களை சேர்த்துள்ளார். இதுவரை 30 முறை 5 விக்கெட்டுகளையும், 5 சதங்களையும் விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் விராட் கோலியை விடவும் டெஸ்ட் போட்டிகளை அதிக ரன்களை சேர்த்து அசத்தி இருக்கிறார் அஸ்வின். விராட் கோலியை விடவும் அஸ்வின் சிறந்த பேட்ஸ்மேன் இல்லையென்றாலும், டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க மாட்டார்.

கேப்டனாக அஸ்வின்

கேப்டனாக அஸ்வின்

ஒவ்வொரு பிட்சின் மீது அஸ்வினுக்கு இருக்கும் அறிவும், அனுபவமும் சர்வதேச கிரிக்கெட்டில் எந்த வீரருக்கும் இல்லாதது. ஒவ்வொரு விவகாரத்தையும் அனுபவப்பூர்வமாகவும், அறிவியல்பூர்வமாகவும் கையாண்டு விடையை தேடுவதில் வல்லவர். இதனால் ரோகித் சர்மா இல்லாத போது, அஸ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற யோசனை சரியானாதாகவே பார்க்கப்படுகிறது.

அஸ்வின் - கும்ப்ளே

அஸ்வின் - கும்ப்ளே

ஒவ்வொரு முறை அஸ்வினை இந்திய நிர்வாகம் வெளியேற்ற முயற்சிக்கும் போதும், மாபெரும் கம்பேக்கை அஸ்வின் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார். எப்படி டிராவிட்டுக்கு பின் சில ஆண்டுகளுக்கு கும்ப்ளே இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு அணியை தோனி கைகளில் ஒப்படைத்தாரோ, அதேபோல் அஸ்வினால் செய்ய முடியும் என்றே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

English summary
Fans are demanding on social media that Ashwin, who has emerged as the best all-rounder in the Indian team, should be appointed as Test captain for a few years. Just as Kumble captained the Indian team and left it in Dhoni's hands, similarly Ashwin can lead the Indian team and hand it over to the young player.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X