For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரலாறு காணாத வெள்ளத்தில் மிதக்கும் ஜம்மு காஷ்மீர்: வீட்டு மாடிகளில் மக்கள் தஞ்சம்

By Siva
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் வீட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு துவங்கிய கன மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழையால் அம்மாநிலத்தில் உள்ள ஆறுகள் நிரம்பி வழிகின்றன.

அந்த மாநிலத்தில் 2 ஆயிரத்து 500 கிராமங்கள் வெள்ள நீரில் தத்தளிக்க 450 கிராமங்கள் ஏற்கனவே நீரில் மூழ்கிவிட்டன.

மோடி

மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அடுத்து பிரதமர் மோடி இன்று அம்மாநிலத்திற்கு சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டார்.

ரூ.1,000 கோடி

ரூ.1,000 கோடி

ஜம்மு காஷ்மீரின் நிலைமை மோசமாக இருப்பதை பார்த்த மோடி ரூ.1,000 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

மாடிகள்

மாடிகள்

மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக இருப்பதால் மக்கள் வீடுகளின் மாடிகளில் முடங்கியுள்ளனர்.

உத்தரகண்ட்

உத்தரகண்ட்

கடந்த ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை போன்று உள்ளது என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகர்

ஸ்ரீநகர்

ஜீலம் ஆறு நிரம்பு வழிவதால் ஸ்ரீநகர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தளம் உள்பட பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கிக் கிடக்கின்றன.

160 பேர் பலி

160 பேர் பலி

வெள்ளம் மற்றும் கன மழையால் பாலங்கள் மற்றும் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் வெள்ளத்திற்கு இதுவரை 160 பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு

ஜம்மு

ஜம்முவில் உள்ள 10 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கன மழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-பதங்கோட் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடல்

பள்ளிகள் மூடல்

மழை மற்றும் வெள்ளத்தையொட்டி வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

மின்சாரம்

மின்சாரம்

தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும் மாநிலம் எங்கும் வெள்ளமாக உள்ளதாலும் பல்வேறு இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

English summary
People of Jammu and Kashmir are struggling as most parts of the state is affected by floods. People are standing in terraces as flood water enters their houses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X