மஹாராஷ்டிரா மக்கள் அமைதி காக்க வேண்டும்... ஜிக்னேஷ் மேவானி பொதுநல கருத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : மஹாராஷ்டிரா மக்கள் அமைதி காக்க வேண்டும் அதே சமயம் அரசும் சட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்று குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கேட்டுக் கொண்டுள்ளார்.

மும்பையில் தலித் அமைப்பினர் நடத்திய போராட்டங்களால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. செம்பூர், ராமாபாய் அம்பேத்கட்ர நகர் மற்றும் குர்லாவின் நேரு நகரிலும் சாலை மறியல் போராட்டங்கள் நடந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Dalit activist and young politician Jignesh tweeted that i appeal to the people of Maharashtra to maintain peace

இந்நிலையில் பீமா கோரேகான் கலவரத்தை கட்டுப்படுத்தாத அரசை கண்டித்து அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் முழுஅடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் செம்பூர் மற்றும் மும்பையின் கிழப்பு புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பையில் நாளை நடைபெறும் முழுஅடைப்பில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தலித் செயற்பாட்டாளரும் இளம் அரசியல்வாதியுமான ஜிக்னேஷ் மேவானி பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜிக்னேஷ் மேவானி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மஹாராஷ்டிரா மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதே போன்று மஹாராஷ்டிர அரசும் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் ஜிக்னேஷ் டுவீட்டியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dalit activist and young politician JigneshMevani tweeted that "Maharashtra government must ensure rule of law. I appeal to the people of Maharashtra to maintain peace

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற