For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகாரில் 34 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

பீகாரில் 1999ஆம் ஆண்டு கிராம மக்கள் 34 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

பீகார் : 34 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டு ஜெகனாபாத் மாவட்டம் செனாரி கிராமத்தில்நுழைந்த மாவோயிஸ்டுகள் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த 34 பேரை அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் இரவு 7.30 மணியளவில் ஒவ்வொருவராக அவர்களது கழுத்தை வெட்டிக் கொன்றனர்.

Death sentence for 10 of killing 34 in 1999 Bihar massacre

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக 45 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜெகனாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

45 பேரில் 5 பேர் இதுவரை தலைமறைவாக உள்ள நிலையில் 2 பேர் வழக்கு நடக்கும் போதே இறந்து விட்டனர். இதில் போதிய ஆதாரம் இல்லாததால் 23 பேர் விடுவிக்கப்பட்டு 15 பேர் குற்றவாளிகள் என கடந்த அக்டோபர் மாதம் உறுதி செய்த நீதிமன்றம் தண்டனை விவரங்களை ஒத்திவைத்தது.

இந்நிலையில் அவர்களில் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ள ஜெகனாபாத் நீதிமன்றம் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

English summary
34 people were killed in Bihar cenari village in 1999 in that massacre case the jahanapath district court sentenced to death for 10 persons and 3 persons were convicted and sentenced to life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X